இப்போதே அதிகாரிகள் திருந்தி விடுங்கள், இல்லை எனில் நான் விடமாட்டேன்- மிரட்டும் ஸ்டாலின்

இப்போதே அதிகாரிகள் திருந்தி விடுங்கள், இல்லை எனில் நான் விடமாட்டேன்- மிரட்டும் ஸ்டாலின்

திருப்பூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய முக. ஸ்டாலின், எனக்கு விவசாயிகளை பிடிக்கும் ஆனால் போலி விவசாயிகளை பிடிக்காது, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும். டெல்டா விவசாயிகளுக்கு முதலமைச்சர் துரோகம் இழைத்துவிட்டார். அனைவரும் மாஸ்க் போடுங்கள்.

இப்போதே அதிகாரிகள் திருந்தி விடுங்கள், இல்லை எனில் நான் விடமாட்டேன்- மிரட்டும் ஸ்டாலின்

இப்போதே அதிகாரிகள் திருந்தி விடுங்கள், இல்லை எனில் நான் விடமாட்டேன். ஊழலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பணப்பட்டுவாடா செய்ய உதவி செய்யும் காவலர்களின் பட்டியலும் எனது கையில் உள்ளது.தொழில் வளர்ச்சி திமுக ஆட்சியில் 10.9 %;
அதிமுக ஆட்சியில் 4.6 % தான். இதுவா வெற்றிநடை போடும் தமிழகம்? மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியை வெற்றிப்பெற செய்யுங்கள். பல்வேறு அரசியல் திருப்பங்களுக்கு அடித்தளமாக இருந்த ஊர் திருப்பூர். தமிழகத்தின் கடன் தொகை ரூ.6 லட்சம் கோடியை தாண்டி உள்ளது” எனக் கூறினார்.