குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000! கமலை காப்பியடித்த ஸ்டாலின்

 

குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000! கமலை காப்பியடித்த ஸ்டாலின்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில் திமுக உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு, தேர்தல் பரப்புரை என வேகம் காட்டி வருகின்றன. இந்த சூழலில் திமுக சார்பில் தொலைநோக்குப் பார்வை கொண்ட தமிழகத்தின் அடுத்த 10 ஆண்டுகளுக்கான செயல்திட்டங்களுக்காக “விடியலுக்கான முழக்கம்” என்ற மாபெரும் பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றுவருகிறது.

குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1000! கமலை காப்பியடித்த ஸ்டாலின்

மாநாட்டில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்களை அறிவித்தார். தமிழகத்தின் எதிர்காலமாக இந்த திருச்சி மாநாடு அமையவுள்ளது.ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் குடும்பத்தலைவிகள் அனைவருக்கும் மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும். கிராமங்களில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் குழாய் வழங்கப்படும். வேலையில்லா திண்டாட்டம் முழுமையாக ஒழிக்கப்படும். அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதியுடன் கூடிய இணைய வசதி ஏற்படுத்தி தரப்படும்,

வறுமைக்கோட்டிற்கு கீழ் யாரும் இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம். அடுத்த 10 ஆண்டுகளில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சியை உருவாக்குவோம். பொருளாதாரம், வேளாண்மை நீர்வளம், நகர்புற வளர்ச்சி, ஊரக உட்கட்டமைப்பு, கல்வி சுகாதாரம் அனைவருக்கும் கிடைக்கும். அதிமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். திமுக ஆட்சிக்கு தொடக்க புள்ளி வைப்போம். மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைகள் முற்றிலும் ஒழிக்கப்படும். குடிமக்களுக்கு குறையாத தண்ணீர் வழங்கப்படும். ஊரக பகுதிகளில் 20 லட்சம் மதிப்பில் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டி தரப்படும்” எனக் கூறினார்.