சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்- ஸ்டாலின் சபதம்

 

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்- ஸ்டாலின் சபதம்

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும் என திமுக தலைவர் முக. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் சென்னை மாதவரத்தில் நடைபெற்ற உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற மக்களின் குறைக்கேட்கும் தேர்தல் பரப்புரையில் பங்கேற்றார். அங்கிருந்த மக்கள் அளித்த கோரிக்கை மனுக்களையும் ஸ்டாலின் பெற்றுக்கொண்டார்.

சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும்- ஸ்டாலின் சபதம்

அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “திமுக ஆட்சியில் பாலங்கள் அமைக்கப்படாவிட்டால் இன்று ட்ராப்பிக் ஜாம் சென்னையாக இருந்திருக்கும். மெட்ராஸ் என்ற பெயரை மாற்றி சென்னை என்று அறிவித்தவர் கலைஞர். இந்த தலைநகரத்தை தலைசிறந்த நகரமாக்க வேண்டும். ஊழல் மணியான வேலுமணி சிங்காரச் சென்னையை வெள்ளத்திலிருந்ஹ்டு தடுக்காமல் சீரழித்தார். கொள்ளை அடிப்பதற்கும், கணக்கு காட்டுவதற்குமான ஊராக சென்னையை ஆக்கிவிட்டார். சென்னையை வென்று திமுக மேயராக்கிய கலைஞருக்கு அண்ணா மோதிரம் அணிவித்தார். அதிமுகவை மட்டும் எதிர்க்கவில்லை, மிருக பலத்தோடு மத்தியில் இருக்கும் பாஜகவையும் எதிர்க்கிறோம். வெற்றி என்பது சாதாரணமாக தெரிகிறது. பலரது எதிர்ப்பையும் மீறி மக்கள் சக்தி நம்மோடு இருக்கிறது. மாற்றத்திற்கு ஏற்றார் போல மாறி வருகிறோம். ஆனால் ஒரு போதும் கொள்கையில் மாற்றம் இல்லை.

2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு முழு ஆதரவு அளிக்கப்படுகிறது. தேர்தல் பணிகளை இணைந்து பணியாற்றி மத சார்பற்ற ஜனநாயக கூட்டணியை வெற்றி பெற செய்யப்படும். 2015 ஆம் ஆண்டு சென்னை மாநகரம் தண்ணீரில் மிதந்தது. செம்பரம்பாக்கம் ஏரித் தண்ணீரை திறந்து விடுவதில் அதிமுக அரசு காட்டிய அலட்சியத்தால் சென்னை மிதந்தது. சென்னையில் அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியாக வேண்டும். ஒன்றைக்கூட விடக்கூடாது. திமுக வெற்றிக்குப் பிறகு இந்த சென்னை மீண்டும் சிங்காரச் சென்னையாக மாற்றப்படும், இது உறுதி” என பேசினார்.