“இபிஎஸ், ஓபிஎஸ் கைகளைப் பிடித்து ஊழலுக்கு உடந்தை என்பதை ஒத்துக்கொண்ட மோடி”

 

“இபிஎஸ், ஓபிஎஸ் கைகளைப் பிடித்து ஊழலுக்கு உடந்தை என்பதை ஒத்துக்கொண்ட மோடி”

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோரின் கைகளைப் பிடித்து ஊழலுக்கு உடந்தை என்பதை பிரதமர் மோடி ஒப்புக்கொண்டுள்ளார். என திமுக தலைஅர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய மு.க.ஸ்டாலின், “திராவிட இயக்கம் தோன்றாவிட்டால் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருப்பேன் என கலைஞர் அடிக்கடி கூறுவர்; இந்த மாநாட்டில் பங்கேற்க வாய்பை ஏற்படுத்தி கொடுத்த அனைவரும் நன்றி. இதையும் திமுக மாநாடு போலவே நினைக்கிறேன். கம்யூனிஸ்ட்டும், திமுகவும் தோன்றிய காலத்திலிருந்து நெருக்கமாக இருந்துகொண்டிருக்கிறது. இந்த இயக்கங்களின் லட்சியங்களையும் நிறைவேற்றினார் கருணாநிதி.

“இபிஎஸ், ஓபிஎஸ் கைகளைப் பிடித்து ஊழலுக்கு உடந்தை என்பதை ஒத்துக்கொண்ட மோடி”

வரும் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சியில் அமரும் திமுக நிச்சயம் நல்லாட்சியை தரும். அதற்கு உறுதுணையாக இருக்கப்போகும் கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் ஒரு கை காவிக்கை, மற்றொரு கை கார்ப்பரேட் கை. இந்த கைகள் தமிழகத்தின் ஊழல் கைகளோடு சேர்ந்துள்ளனர். மோடி ஆட்சியில் சொந்த மக்கள் மீதே பொருளாதார தாக்குதல் நடத்தப்படுகிறது. பெட்ரோல், டீசல்,காஸ் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது. பாரதியார், ஒளவையார் பாடலை பாடிவிட்டு தமிழக விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறார். மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் என பிரதமர் சொல்கிறார். ஆனால், ஜனவரி 21 ஆம் தேதி இலங்கையால் தமிழக மீனவர்கள் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள்” எனக் கூறுகிறார்.