முதலமைச்சர் எடப்பாடியின் ஆட்டம் 6 மாதங்கள் மட்டுமே: ஸ்டாலின்

 

முதலமைச்சர் எடப்பாடியின் ஆட்டம் 6 மாதங்கள் மட்டுமே: ஸ்டாலின்

கடலூர் மாவட்டம் நெய்வேலியில் மறைந்த முன்னாள் திமுக தலைவர் கருணாநிதியின் சிலையை திமுக தலைவர் ஸ்டாலின் தன்னுடைய ஆழ்வார்பேட்டை இல்லத்தில் இருந்து காணொலி வாயிலாக திறந்து வைக்கிறார்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “திராவிடர் கட்சி தொடங்கமால் இருந்து இருந்தால் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருந்து இருப்பேன் என்று கருணாநிதி கூறுவார், என் என்றால் அந்த அளவிற்கு தொழிலாளர்கள் மீது பற்று கொண்டவர். மத்திய, மாநில அரசுகள் தொழிலாளர்களுக்கு விரோத அரசாக இருக்கிறது. கொரோனா காலத்திலும் தொழிலாளர்களுக்கு துரோகம் தான் செய்தது. மத்திய அரசு அதற்கு ஆதரவாக மாநில அரசு இருந்தது. முதலமைச்சருக்கு தொழிலாளர்கள், விவசாயிகளை பிடிக்காது. ஆனால் நானும் ஒரு விவசாயி என்று அவர் கூறுவார். நீட் தேர்வினால் ஏராளமான மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். ஆனால் அது தற்கொலை கிடையாது. மத்திய, மாநில அரசுகள் செய்த கொலை.

முதலமைச்சர் எடப்பாடியின் ஆட்டம் 6 மாதங்கள் மட்டுமே: ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும், ரத்து செய்ய வேண்டும் , அனுமதிக்க மாட்டோம் என்று அதிமுக பொதுக்குழுவில் பேசினார்கள், தேர்தல் அறிக்கையையில் கூறினார்கள், சட்டமன்றத்திலும் தீர்மானம் போடப்பட்டது ஆனால் அதனை எதுவுமே நிறைவேற்றாமல் இருக்கிறார்கள். பாஜக ஆட்சியில் இருக்கும் போது நீட் தேர்வு நடந்தது. ஆனால் திமுக தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என்று பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். நீட் தேர்வை எதிர்த்து 2013 ஆண்டு மே 5 ஆம் தேதி கருணாநிதி நீண்ட அறிக்கையை வெளியிட்டார். முதலமைச்சரின் ஆட்டமெல்லாம் இன்னும் 6 மாதங்கள் மட்டுமே” என தெரிவித்தார்.