போக்கத்த பசங்களெல்லாம் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள்! மத்திய அரசுக்கு கூனி குறுகி இருக்கிறார்கள்- ஸ்டாலின் விளாசல்

போக்கத்த பசங்களெல்லாம் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள்! மத்திய அரசுக்கு கூனி குறுகி இருக்கிறார்கள்- ஸ்டாலின் விளாசல்

அண்ணாவின் 112 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு நடைபெறும் தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெற்றுவருகிறது. இவ்விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “மாநாடுகளையும் காணொளிக் காட்சியில் நடத்தும் வல்லமை திமுகவிற்கு இருக்கிறது. வெட்டி வா என்றால் கட்டி வருபவர்கள் திமுகவினர். 1965 ல் தொடங்கிய போராட்டம் இன்னும் முடியவில்லை. தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாடே சொல்கிறது.. நாட்டு மக்களே சொல்கிறார்கள் 7 மாதத்தில் நம் ஆட்சி தான். கொரோனாவிலும் பொய்க்கணக்கு, கொள்ளையடிப்பதிலும் பொய்க்கணக்கு. ஒரு உயிர் கூட போகாது என்றாரே முதல்வர். இப்போது என்ன ஆனது? 8000 பேருக்கு மேல் கோவிட் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.

போக்கத்த பசங்களெல்லாம் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள்! மத்திய அரசுக்கு கூனி குறுகி இருக்கிறார்கள்- ஸ்டாலின் விளாசல்

நீட் தற்கொலை என்று சொல்லமாட்டேன். மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து கொலை செய்துள்ளன. 13 கொலைகள் நடத்தப்பட்டுள்ளன. வேலை வெட்டியில்லாமல் முதல்வர் ஊர் ஊராக செல்கிறார். சென்னை டூ சேலம்
சேலம் டூ சென்னை என சுற்றியவர் இன்று ஊர் ஊராக சுற்றுகிறார் நீ என்ன சுற்றினாலும் ஒன்றும் நடக்காது. போக்கத்த பசங்களெல்லாம் ஆட்சியில் அமர்ந்துள்ளார்கள். மத்திய அரசுக்கு கூனி குறுகி இருக்கிறார்கள். அடிமை ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்” எனக் கூறினார்.