திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை சீர்குலைக்க எஸ்பி வேலுமணி முயற்சி- ஸ்டாலின்

 

திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை சீர்குலைக்க எஸ்பி வேலுமணி முயற்சி- ஸ்டாலின்

எட்டு முறை சட்டமன்ற உறுப்பினரானாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் செங்கோட்டையன் ஆனால் தொகுதியின் கோரிக்கைகள் எட்டக்கனியாக உள்ளது‌ என்று ஈரோட்டில் நடைபெற்ற மக்கள்‌கிராம சபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

ஈரோடு மாவட்டம் சிறுவலூர் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் ‌கிராம சபையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரடியாக பங்கேற்று கிராம மக்களின் குறைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறிந்தார்.

நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், “கிராம சபைக் கூட்டம் என்றால் எடப்பாடிக்கு கோபம் வரும். எனவே மக்கள் கிராம சபைக் கூட்டம் என்று நடத்தி வருகிறோம். தொண்டாமுத்தூர் தொகுதியில் கலவரத்தை நடத்தி கூட்டத்தைக் கலைக்க எஸ்.பி.வேலுமணி திட்டம் போட்டது நேற்று இரவே எங்களுக்கு தகவல் வந்தது. ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து கூட்டத்தில் பிரச்சனை செய்ய முயற்சித்தார். நாங்கள் அவரை காவலர்களிடம் ஒப்படைத்தோம். ஆனால் அந்த பெண் நாங்கள் தாக்கியதாக புகார் கொடுத்தார். அவர் காவல்நிலையத்திற்கு வெளியே வந்தவுடன் எஸ்.பி.வேலுமணியிடம் போனில் பேசினார்‌.

கிராம‌சபையை நடத்தக்கூடாது என எடப்பாடி அரசு தடை உத்தரவு போட்டது. வருடத்திற்கு மூன்று முறை நடத்தப்பட வேண்டும். இந்த கூட்டங்களில் மக்களின் அன்றாட பிரச்சனைகள் பேசப்பட்டு தீர்வுக்காணப்படும்‌, ஆனால் அதிமுக அரசில் கிராமசபைக்கூட்டம் நடத்தப்படவில்லை. கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்‌போது தமிழகம் முழுவதும் திமுக கிராம சபையை நடத்தி 38 இடங்களை வெற்றி பெற்று நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக திமுக உள்ளது. காலில் விழுந்து முதல்வரானார் எடப்பாடி.

திமுகவின் மக்கள் கிராமசபைக் கூட்டத்தை சீர்குலைக்க எஸ்பி வேலுமணி முயற்சி- ஸ்டாலின்

ஜெயலலிதா மரணம் மர்மமாக உள்ளது. எம்.ஜி.ஆர்‌ மருத்துவமனையில் இருந்தபோது சுகாதாரத்துறை அமைச்சர் தினமும் அறிக்கை அளிப்பார். ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அனைத்து அமைச்சர்களும் அம்மா காபி சாப்பிட்டார், டிவி பார்த்தார் என்றுதான் கூறினார்கள். முதலமைச்சர் பதவியை புடுங்கியவுடன் பன்னீர்செல்வத்திடம் அவர் தர்மயுத்தம் நடத்தினார். சசிகலா பதவியேற்க இருந்த நிலையில் உச்சநீதிமன்றத்தீர்ப்பால் அவர் சிறைக்கு சென்றார். யாரை முதல்வராக தேர்ந்தெடுக்க யோசித்தப்போது காலில் விழுந்து எடப்பாடி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

40 நிமிடங்கள் தியானம் செய்து ஆவியுடன் பேசிய பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக கூறி நீதி விசாரணை ஆணையம் கோரினார். தற்போது விசாரணை கமிஷன் அமைத்து 3 வருடங்கள் ஆன நிலையிலும் இதுவரை எந்த உண்மையும் வரவில்லை ‌. திமுக ஆட்சியில் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணமாகவர்களுக்கு தண்டனை வாங்கித் தரப்படும். இத்தகைய கொடுமையான ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர நான்கே மாதங்கள் தான் இருக்கிறது. ஏப்ரலில் நடைபெறும் தேர்தலில் திமுக வெற்றிபெறும். திமுக ஆட்சிக்கு வரும் என்ற நம்பிக்கை எங்களைவிட மக்களாகிய உங்களுக்கு அதிகமாக இருக்கிறது” எனக் கூறினார்.