தலைவரும் பொதுச்செயலாளரும் இல்லாத கட்சி அதிமுக- ஸ்டாலின் விமர்சனம்

 

தலைவரும் பொதுச்செயலாளரும் இல்லாத கட்சி அதிமுக- ஸ்டாலின் விமர்சனம்

சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தொடங்கினார். ஈரோடு தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில்
“தமிழகம் மீட்போம்” என்ற தலைப்பில் 2021 சட்டமன்ற தேர்தல் சிறப்பு காணொலிக் கூட்டத்தில் முக ஸ்டாலின் காணொலி மூலம் பங்கேற்றார், அப்போது பேசிய ஸ்டாலின், “கடந்த தேர்தல் வெற்றியை கலைஞர் கையில் ஒப்படைக்க முடிவு செய்து முயற்சித்த நிலையில் காலம் அவரை நம்மிடம் இருந்து பிரித்துவிட்டது. வரும் தேர்தல் வெற்றியை கலைஞருக்கு சேர்க்க வேண்டும். தொழில்நுட்ப வசதியை கொண்டு எழுச்சி பெற்று வருகிறோம். தமிழகத்தில் ஆட்சி நடத்தாமல் காட்சி நடத்தி வருகின்றனர். அதிமுக வில் யார் தலைவர் என்பது தெரியவில்லை. முதல்வருக்கும் அமைச்சர்களுக்கும் கட்டுகோப்பு இல்லை. தலைவரும் பொதுச்செயலாளரும் இல்லாத கட்சி அதிமுக

மக்கள் தேர்வு செய்யாதவர்களே ஆட்சி நடத்தி வருகின்றனர். 2011 இல் இருந்து தமிழகத்தை பாதாளத்திற்கு கொண்டு சென்றுவிட்டனர் அதிமுகவினர். முதல்வர் நாற்காலியை தக்க வைக்க பழனிச்சாமியும் அதனைப் பிடிப்பதற்கு பன்னீர்செல்வமும் போராடுவதே பெரிதாக உள்ளது. தமிழக அரசின் செயல்பாடுகளை பாரதிய ஜனதா மட்டும் தான் பாராட்டும். வேறு யாரும் பாராட்ட மாட்டார்கள். கொரோனாவால் ஒருவரையும் பாதிக்க விடமாட்டோம் என முதல்வர் பழனிச்சாமி தெரிவித்த நிலையில் தமிழகத்தில் ஆயிரக்கணக்கானோர் இறந்துள்ளனர். இதற்கு பழனிச்சாமி என்ன பதில் சொல்வார்

தலைவரும் பொதுச்செயலாளரும் இல்லாத கட்சி அதிமுக- ஸ்டாலின் விமர்சனம்

அனைத்து வகையிலும் மோசமான அரசு தான் எடப்பாடி அரசு. தூத்துக்குடியில் அமைதியாக போராடியவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தியது இந்த அரசு. கஜா புயல் போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்காதது இந்த அரசு. சாத்தான் குளத்தில் தந்தை மகனை அடித்து கொன்றது இந்த அரசு. மணல் கொள்ளை, சேலம் 8வழிச்சாலை, உயர்மின் கோபுரம் போன்றவற்றில் அதிமுக மக்களுக்கு துரோகமே செய்தது” என சாடினார்