ஒருபுறம் கொரோனா மறுபுறம் சீனா! நாட்டிற்காக திமுக துணை நிற்கும் – மு.க.ஸ்டாலின்

 

ஒருபுறம் கொரோனா மறுபுறம் சீனா! நாட்டிற்காக திமுக துணை நிற்கும் – மு.க.ஸ்டாலின்

இந்தியா – சீனா எல்லையில் கடந்த திங்கட்கிழமை இரவு இருநாட்டு ராணுவங்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இந்தியாவை சேர்ந்த ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். மேலும் 76 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்நிலையில் லடாக் எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க பிரதமர் மோடி தலைமையில் காணொலியில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று மாலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சோனியா காந்தி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ஒருபுறம் கொரோனா மறுபுறம் சீனா! நாட்டிற்காக திமுக துணை நிற்கும் – மு.க.ஸ்டாலின்

கூட்டத்திற்கு பின் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடி சொன்னது போல நமது நாட்டிற்காக வீரமரணமடைந்த ராணுவ வீரர்களின் உயிர் தியாகம் வீண் போகாது, வீரர்களின் தியாகம் நாட்டை ஒன்றிணைப்பதுடன் நாட்டு மக்களுக்கு கூடுதல் வலிமை சேர்த்துள்ளது. நாடு இப்போது ஒருபுறம் கொரோனாவாலும் மறுபுறம் சீன ஆக்கிரமிப்புக்களாலும் கடினமான சூழ்நிலையை சந்தித்துவருகிறது. எப்போதும் போல நாட்டு நலன் சார்ந்த அரசின் நடவடிக்கைகளுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்” என தெரிவித்தார்.