“இலங்கை போர்க்குற்றம் விவகாரத்தில் மோடி மௌனம்; தமிழக மக்கள் பேரதிர்ச்சி”

 

“இலங்கை போர்க்குற்றம் விவகாரத்தில் மோடி மௌனம்; தமிழக மக்கள் பேரதிர்ச்சி”

கடந்த பிப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமை தலைமை ஆணையர் அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்து சுற்றறிக்கை அனுப்பினார். அதில் இலங்கை அரசு நடத்திய படுகொலைகள், போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் உள்ளிட்ட குற்றங்களுக்காக அந்நாட்டு ஆட்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோரை பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடத்த வேண்டும். இதற்கான முன்னெடுப்பை ஐ.நா. பொதுப் பேரவையும், பாதுகாப்புக் குழுவும் எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிச் செயல்பட உறுப்பு நாடுகள் முன்வர வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

“இலங்கை போர்க்குற்றம் விவகாரத்தில் மோடி மௌனம்; தமிழக மக்கள் பேரதிர்ச்சி”

நாளை ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இத்தீர்மானம் விவாதத்திற்கு வரப்போகிறது. இத்தீர்மானத்தை பிரிட்டன், கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி, மாண்டினிக்ரோ உள்ளிட்ட ஆறு நாடுகள் முன்மொழிந்துள்ளன. ஆனால் இந்திய அரசு மௌனம் காத்துவருகிறது. இச்சூழலில் இலங்கை வெளியுறவுத் துறைச் செயலாளர் ஜெயநாத் கெலம்பகே, இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கக்காது; இலங்கை அரசைத்தான் ஆதரிக்கப்போகிறது என்று கூறியதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

“இலங்கை போர்க்குற்றம் விவகாரத்தில் மோடி மௌனம்; தமிழக மக்கள் பேரதிர்ச்சி”

இதனைக் கண்டித்து வைகோ அறிக்கை வெளியிட்டிருந்தார். தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “போர்க்குற்றங்களுக்கு எதிரான வாக்கெடுப்பில் இலங்கை அரசுக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்கும் என்ற தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

இலங்கைத் தமிழர்களுக்கு அநீதியான நிலைப்பாட்டை இந்தியா எடுத்திடவே கூடாது; சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடந்திட பிரதமர் மோடியின் முன்னெடுப்பு தேவை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.