“அமைச்சர்கள் செல்லூர் ராஜூ – ஆர்பி உதயகுமார் இடையே கோஷ்டி மோதல்”

 

“அமைச்சர்கள் செல்லூர் ராஜூ – ஆர்பி உதயகுமார் இடையே கோஷ்டி மோதல்”

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்துவருகிறார். செல்லும் இடமெங்கிலும் அதிமுக அமைச்சர்களையும் முதலமைச்சரையும் கடுமையாக விமர்சிக்கிறார். அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் நேற்று பிரச்சாரம் செய்தார். திருமங்கலம் பிரச்சாரத்தில் பேசிய அவர், “தென்பாண்டி மண்டலமாம் இந்த மதுரைக்கு வந்திருக்கிறேன். நெஞ்சில் ஈரமும் வீரமும் கொண்டிருக்கும் மக்கள் வாழும் இந்த மண்ணிற்கு வந்திருக்கிறேன். நீதி கேட்டு மதுரையில் இருந்து திருச்செந்தூர் வரையில் நடைபயணமாக சென்ற தலைவர் கலைஞர் அவருடைய மகன் ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

“அமைச்சர்கள் செல்லூர் ராஜூ – ஆர்பி உதயகுமார் இடையே கோஷ்டி மோதல்”

எய்ம்ஸ் ஏன் கட்டவில்லை என்று கேட்டால் ஜப்பானில் நிதி கேட்டிருக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், தமிழ்நாடு என்ன ஜப்பானிலா இருக்கிறது? குஜராத் மாநிலத்தில் தற்காலிகக் கட்டடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ்நாடு என்பது இந்தியாவில் இல்லையா? குஜராத்திற்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கும்போது தமிழ்நாட்டுக்கு ஏன் முக்கியத்துவம் தரவில்லை.

“அமைச்சர்கள் செல்லூர் ராஜூ – ஆர்பி உதயகுமார் இடையே கோஷ்டி மோதல்”

ஏனென்றால் நாடாளுமன்ற தேர்தலில் அவர்களுக்கு நீங்கள் பூஜ்ஜியம் போட்டு கொடுத்து விட்டீர்கள். எனவே இப்போது மோடியும் பழனிசாமியும் ஜோடி சேர்ந்திருக்கிறார்கள். இந்த ஜோடியை குளோஸ் செய்ய வேண்டுமா? வேண்டாமா? இந்த மதுரைக்கு எவ்வளவோ சிறப்புகள் இருக்கிறது. ஆனால் ஒரு அசிங்கமும் இருக்கிறது. அந்த அசிங்கத்தின் அடையாளம்தான் செல்லூர் ராஜூ – உதயகுமார் – ராஜன் செல்லப்பா. இந்த மூன்று பேருக்குள்ளும் கோஷ்டி தகராறுகள் நடந்து கொண்டு இருக்கின்றது. அதனால் இந்த மதுரை மாவட்டத்தில் எந்த முன்னேற்றமும் இல்லை” என்றார்.