ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்… எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கொளுத்தி போட்ட ஸ்டாலின்!

ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்… எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கொளுத்தி போட்ட ஸ்டாலின்!

திமுக தலைவர் ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம் செய்துவருகிறார். செல்கின்ற இடமெல்லாம் முதலமைச்சரையும் அமைச்சர்களையும் கடுமையாக விமர்சிக்கிறார். அந்த வகையில் இன்று ஈரோடு மாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிப்பாளையம், பவானி, பவானிசாகர் தொகுதிகளில் மக்கள் ஆதரவு கோரி பரப்புரை மேற்கொண்டுவருகிறார்.

ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்… எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கொளுத்தி போட்ட ஸ்டாலின்!

பரப்புரையில் பேசிய ஸ்டாலின், “ஒரு காலத்தில் செங்கோட்டையனிடம் எடப்பாடி பழனிசாமி கைகட்டி நின்று கொண்டிருந்தார். இன்று எடப்பாடியிடம் செங்கோட்டையன் கை கட்டி நிற்கிறார். அப்போது ஏற்பட்ட வஞ்சத்தால் எடப்பாடி இப்போது செங்கோட்டையனைப் பழிவாங்குகிறார். பள்ளிகள் திறப்பில்லை என்று செங்கோட்டையன் சொன்னால் அடுத்த நாளே பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிப்பார் பழனிசாமி. அந்த அளவிற்கு பழிவாங்குகிறார்” என்றார்.

ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்… எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கொளுத்தி போட்ட ஸ்டாலின்!

செங்கோட்டையனைப் பொறுத்தவரை எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி. 1977ஆம் ஆண்டே எம்எல்ஏவாகி சட்டப்பேரவைக்குள் நுழைந்தவர். அப்போது தான் எடப்பாடி பழனிசாமி அரசியலுக்குள்ளேயே நுழைகிறார். எடப்பாடி முதல் முறை எம்எல்ஏவாகும்போது மூன்றாம் முறையாக சட்டப்பேரவைக்குள் செங்கோட்டையன் என்ட்ரியானார். எப்படி பார்த்தாலும் வயது, அரசியல் அனுபவம் என எல்லாவற்றிலும் சீனியராகவே இருந்திருக்கிறார். ஓபிஎஸ் தர்மயுத்ததிற்குப் பின் சசிகலா செங்கோட்டையனைத் தான் முதலமைச்சராக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஏற்கெனவே ஏழாம் பொருத்தம்… எடப்பாடிக்கும் செங்கோட்டையனுக்கும் கொளுத்தி போட்ட ஸ்டாலின்!

ஆனால் ஏற்கெனவே சசிகலாவுடன் முட்டிக்கொண்டதால் தான் அவரின் அமைச்சர் பதவியைப் பிடுங்கி சசிகலா ஆதரவாளர் தோப்பு வெங்கடாச்சலத்துக்குக் கொடுக்கப்பட்டது. அதனால் செங்கோட்டையனை டீலில் விட்டுவிட்டு எடப்பாடியை டிக் அடித்தார் சசிகலா. அதிருப்தியில் செங்கோட்டையன் ஏதாவது செய்துவிடுவார் என்பதால் சரிக்கட்டுவதற்காகப் பசையுள்ள துறையான பள்ளிக்கல்வித் துறை வழங்கப்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது. எடப்பாடி அரசியல் அரிச்சுவடியை அறிவதற்கு முன்பே ஏதோ ஒரு குற்ற வழக்கிலிருந்து தப்பிக்க அவர் செங்கோட்டையனிடம் தஞ்சமடைந்ததாக ஒரு தகவல் பரவலாக இருக்கிறது. இதைக் குறிப்பிட்டு தான் ஸ்டாலின் பேசியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.