“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

சொத்து வரியுடன் சேர்த்து குப்பையைச் சேகரிப்பதற்கும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் கட்டணம் வசூலிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்திருந்தார். அதன்படி வீடுகளுக்கு 10 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையும், திருமண மண்டபங்களுக்கு 1000 ரூபாய் – 10,000 ரூபாய் வரையும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. கல்வி நிறுவனங்கள், தியேட்டர்கள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கும் தனித்தனியே கட்டணம் வரையறுக்கப்பட்டிருந்தது.

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

இதற்கு அப்போதே திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். உடனே அறிவிப்பை ரத்துசெய்வதாக ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். இச்சூழலில் தற்போது கொட்டிவாக்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிவரும் ஸ்டாலின் இதுதொடர்பாகப் பேசியிருக்கிறார்.

“குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு அதிமுக அரசு தான்” – அனல் பறக்கும் ஸ்டாலின் பிரச்சாரம்!

அப்போது பேசிய அவர், “அரசுப் பேருந்துகளின் கட்டணங்களைக் குறைப்பது குறித்து திமுக ஆட்சியில் பரிசீலிக்கப்படும். ஆட்சியில் அமர்ந்தவுடன் போக்குவரத்து தொழிலாளர்களின் குறைகளைத் தீர்ப்போம். குப்பைக்கு வரி விதித்த குப்பை அரசு தான் அதிமுக அரசு. சென்னையில் எங்கு சென்றாலும் குப்பைகளாகக் காட்சியளிக்கின்றன. சிங்கார சென்னையை இந்த அரசு சீரழித்துவிட்டது” என்றார்.