“இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்தே தொடங்கும்” – ஸ்டாலினின் வேற லெவல் ‘அரசியல்’ அறிவிப்பு!

“இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்தே தொடங்கும்” – ஸ்டாலினின் வேற லெவல் ‘அரசியல்’  அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று பேரவை விதி 110-இன் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,”வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும் என்ற உணர்வை நமக்கெல்லாம் ஏற்படுத்திய தமிழினத் தலைவர் கருணாநிதி போற்றிய செம்மொழியாம் தமிழ் மொழியின் பெருமையை, உலகத்துக்கு நாகரிகத்தையும், பண்பாட்டையும் கற்றுக்கொடுக்க, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வலம் வந்த தமிழினத்தின் சிறப்பைப் பறைசாற்றும் அறிவிப்பு ஒன்றை, விதி எண் 110-ன்கீழ் வெளியிடுகிறேன்.

“இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்தே தொடங்கும்” – ஸ்டாலினின் வேற லெவல் ‘அரசியல்’  அறிவிப்பு!

தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்தியத் துணைக்கண்டமெங்கும்; அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித் தடம் பதித்த வெளிநாடுகளிலும்; தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகள் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும். முதல் கட்டமாக, சங்ககாலத் துறைமுகமான முசிறி, தற்போது பட்டணம் என்ற பெயரில் கேரள மாநிலத்தில் அமைந்துள்ளது. சேரநாட்டின் தொன்மையினையும், பண்பாட்டினையும் அறிந்துகொள்ளும் வகையில், கேரள மாநிலத் தொல்லியல் வல்லுநர்களுடன் இணைந்து அங்கு ஆய்வுப் பணி மேற்கொள்ளப்படும்.

“இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்தே தொடங்கும்” – ஸ்டாலினின் வேற லெவல் ‘அரசியல்’  அறிவிப்பு!

ஆந்திராவிலுள்ள வேங்கி, கர்நாடகவிலுள்ள தலைக்காடு, ஒடிசாவில் பாலூர் ஆகிய வரலாற்றுச் சிறப்புடைய இடங்களில் ஆய்வுகள் மேற்கொள்ள உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அன்றைய ரோமப் பேரரசின் ஒரு பகுதியாக விளங்கிய எகிப்து நாட்டிலுள்ள குசிர்-அல்-காதிம் மற்றும் பெர்னிகா, மேலும் ஓமான் நாட்டின் கோர் ரோரி ஆகிய இடங்களில் பழந்தமிழகத்தோடு இருந்த வணிகத் தொடர்பை உறுதி செய்யும் வகையில், தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கிடைத்துள்ளன. அந்தப் பகுதிகளில், அந்தந்த நாட்டின் தொல்லியல் வல்லுநர்களோடு இணைந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படும்.

“இனி இந்தியாவின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்தே தொடங்கும்” – ஸ்டாலினின் வேற லெவல் ‘அரசியல்’  அறிவிப்பு!

மாமன்னர் ராஜேந்திர சோழன் வெற்றித் தடம் பதித்த தென்கிழக்காசிய நாடுகளான இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, வியட்நாம் ஆகிய நாடுகளில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களில் அந்தந்த நாட்டுத் தொல்லியல் வல்லுநர்கள் துணையோடு, உரிய அனுமதி பெற்று ஆய்வுகள் மேற்கொள்ளப்படும். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என உலகுக்கு அறிவித்த தமிழரின் பண்பாட்டு அடையாளங்களைத் தேடி, இனி உலகெங்கும் பயணம் செய்வோம். இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு, இனி, தமிழ் நிலப்பரப்பில் இருந்துதான் தொடங்கி எழுதப்பட வேண்டும் என்பதைச் சான்றுகளின் அடிப்படையில், அறிவியல் வழிநின்று நிறுவுவதே நமது அரசினுடைய தலையாய கடமை” என்றார்.