‘சசிகலாவிடம் இருந்து தப்பிக்க முதல்வர் டெல்லி பயணம்’ : மு.க ஸ்டாலின் விமர்சனம்!

 

‘சசிகலாவிடம் இருந்து தப்பிக்க முதல்வர் டெல்லி பயணம்’ : மு.க ஸ்டாலின் விமர்சனம்!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. ஆளும் கட்சியுடனான எதிர்க்கட்சியின் மோதல் நாளுக்கு நாள் வலுக்கிறது. தேர்தலில் பாஜகவுடன் கூட்டணியை அதிமுக உறுதிப்படுத்தியிருக்கும் நிலையில், அரசு முறை பயணமாக டெல்லி சென்ற முதல்வர் பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். தமிழகத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்தும், சட்டமன்றத் தேர்தல் குறித்தும் அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக தெரிகிறது.

‘சசிகலாவிடம் இருந்து தப்பிக்க முதல்வர் டெல்லி பயணம்’ : மு.க ஸ்டாலின் விமர்சனம்!

முதல்வரின் இந்த பயணம், அரசு முறை பயணம் என்று சொல்லப்பட்டாலும் இதன் முக்கிய நோக்கம் தேர்தல் ரீதியாக தான் இருக்கும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சிறையில் இருந்து சசிகலா விடுதலையாகவிருக்கும் நிலையில், திடீரென முதல்வர் டெல்லி சென்றதற்கு என்ன காரணம்? பிரச்சாரத்திற்கு முன்பே முதல்வர் சென்றிருக்கலாமா? என்றெல்லாம் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.

‘சசிகலாவிடம் இருந்து தப்பிக்க முதல்வர் டெல்லி பயணம்’ : மு.க ஸ்டாலின் விமர்சனம்!

இந்த நிலையில், சசிகலாவிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் முதல்வர் பழனிசாமி சந்தித்ததாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மேலும் அதிமுக மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் ஸ்டாலின், வாழைப்பழத்தில் ஊசி நுழைவது போல் வெளியே தெரியாத வகையில் அமைச்சர் தங்கமணி ஊழல் செய்து வருவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

மேலும், புதுச்சேரியில் திமுகவை வலுப்படுத்த சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் புதுச்சேரி தேர்தலுக்கு இன்னும் அறிவிப்பு வரவில்லை, இதனை கூட்டணியுடன் குழப்பிக்கொள்ள வேண்டாம் என்றும் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.