“திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல் தான் செய்யும்” – மு.க ஸ்டாலின்

 

“திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல் தான் செய்யும்” – மு.க ஸ்டாலின்

எதிர்க்கட்சி என்பதால் அரசியல் தான் செய்வோம் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. தமிழக அரசியலில் முக்கிய புள்ளிகளாக திகழ்ந்த ஜெயலலிதா மற்றும் கருணாநிதி இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், எந்த கட்சி அரியணை ஏறும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் மருத்துவ படிப்பு இட ஒதுக்கீடு விவகாரத்தில் அரசுக்கு கைக் கொடுக்க தயாராக இருப்பதாக மு.க ஸ்டாலின் அறிவித்தார்.

“திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல் தான் செய்யும்” – மு.க ஸ்டாலின்

ஆனால், அரசியல் காரணங்களுக்காக மு.க ஸ்டாலின் இவ்வாறு கூறுவதாக அமைச்சர்கள் விமர்சித்தனர். இந்த நிலையில் அதிமுகவின் விமர்சனங்களுக்கு பதில் அளித்து கொளத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க ஸ்டாலின், திமுக எதிர்க்கட்சி என்பதால் அரசியல்தான் செய்யும் என தெரிவித்தார். மேலும், 7.5% இடஒதுக்கீடு மசோதா நீர்த்துப்போக செய்யும் விதமாக ஆளுநர் செயல்படுகிறார் என்றும் கூறினார்.