விவசாயிகளின் நலனையும் வாழ்க்கையையும் உரிய நேரத்தில் காப்பாற்றுங்கள்: முக ஸ்டாலின் கோரிக்கை

 

விவசாயிகளின் நலனையும் வாழ்க்கையையும் உரிய நேரத்தில் காப்பாற்றுங்கள்: முக ஸ்டாலின் கோரிக்கை

தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததன் படி, சென்னை மட்டுமில்லாமல் திருவாரூர், கோவை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. கனமழையின் காரணமாக பல இடங்களில் கோடைக்கால நெற்பயிர்கள் சேதம் அடைந்துள்ளன. திருவாரூர் அருகே 3 நாட்களாக பெய்த கனமழையால் 300 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் சாய்ந்தன. இதனால் அப்பகுதி விவசாயிகள் பெரும் வேதனையில் இருக்கின்றனர். நீரில் சாய்ந்த நெற்பயிர்களை காப்பாற்ற வயல்களில் தேங்கி இருக்கும் தண்ணீரை வடியவைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இதற்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.

விவசாயிகளின் நலனையும் வாழ்க்கையையும் உரிய நேரத்தில் காப்பாற்றுங்கள்: முக ஸ்டாலின் கோரிக்கை

இது மட்டுமில்லாமல் பல இடங்களில் கொள்முதலுக்காக வைத்திருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்த நிலையில், நெற்பயிர்கள் முளைத்ததால் அனைத்தும் வீணாகியுள்ளன. இதனால் விவசாயிகளுக்கு கடும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், மழையால் பாழ்படும் நெல் மூட்டைகளை அரசு காக்க வேண்டும் என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பருவமழையால் பாழ்படும் நெல் மூட்டைகளை பாதுகாத்து விரைவாக அரசு கொள்முதல் செய்ய வேண்டும் என்றும் விவசாயிகளின் நலனையும் வாழ்க்கையையும் உரிய நேரத்தில் காப்பாற்றுங்கள் என்றும் கூறியுள்ளார்.