‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’.. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இது: மு.க ஸ்டாலின் கருத்து

 

‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’.. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இது: மு.க ஸ்டாலின் கருத்து

கடந்த 1989 ஆம் ஆண்டு திமுக ஆட்சியில் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை இருக்கிறது என சட்டம் கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து கடந்த 2005 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில், இந்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 2005 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த பெண்களுக்கு இச்சட்டம் பொருந்தாது என உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், “சொத்தில் பெண்களுக்கு சம உரிமை உண்டு” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

‘பெண்களுக்கு சொத்தில் சம உரிமை’.. வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு இது: மு.க ஸ்டாலின் கருத்து

இந்த நிலையில் உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு வரலாற்றிலேயே சிறப்புமிக்க தீர்ப்பு என திமுக தலைவர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். அனைத்து தளங்களிலும் பெண்ணினம் சம உரிமை பெற்று தலை நிமிர உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு அடித்தளம் அமைக்கும் என்றும் சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்ற சட்டத்தை 1989லேயே கருணாநிதி கொண்டு வந்தார் என்றும் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை திமுகவின் கொள்கைக்கு கிடைத்த மாபெரும் வெற்றியாக கருதுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.