Home அரசியல் பொதுவெளியில் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

பொதுவெளியில் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் – மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள் வரும் ஜூன் 3ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தற்போது கொரோனா பாதிப்பு அதிகமாக பரவி வரும் நிலையில், கருணாநிதியின் பிறந்தநாளை எளிமையாக கொண்டாடுமாறு தமிழக முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கழக தொண்டர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

பொதுவெளியில் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
பொதுவெளியில் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!

இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஊரடங்கு காலம் என்பதால் உள்ளம் நிறைந்த கலைஞரை நம்மில் இல்லத்திலேயே கொண்டாடுவோம். கொரோனா பேரிடர் காலத்தில் மக்களின் உயிரை காப்பதே நம் தலையாய பணியாகும். மாபெரும் தலைவர் நம்முடைய இல்லாவிட்டாலும் அவர் கட்டிக்காத்த இயக்கம் தமிழகத்தை ஆளும் வாய்ப்பினை பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கலைஞர் பிறந்தநாளை கோலாகலமாகக் கொண்டாட இயலவில்லையே என்ற ஏக்கம் உடன்பிறப்புகளுக்கு இருக்கும். எனினும் கட்டுப்பாடு காத்து அவரவர் இல்லங்களில் கலைஞர் திருவுருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி கொண்டாடுங்கள் என கேட்டுக்கொண்டுள்ளார். முன்னதாக, தனது பதவியேற்பு விழாவின் போதும் கொண்டாட்டங்கள் வேண்டாம், வீடுகளிலேயே பத்திரமாக இருங்கள் என மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு அறிவுறுத்தியது நினைவுகூரத்தக்கது.

பொதுவெளியில் கருணாநிதி பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் - மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்!
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

இந்த வார பங்கு வர்த்தகத்தில் எவை தாக்கத்தை ஏற்படுத்தும்?… என்ன சொல்கிறார்கள் பங்குச் சந்தை நிபுணர்கள்..

நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள், வட்டி விகிதம் தொடர்பான அமெரிக்க பெடரல் வங்கியின் முடிவு உள்ளிட்டவை இந்த வார பங்கு வர்த்தகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று பங்குச் சந்தை நிபுணர்கள்...

டிஎன்பிஎல்: 2வது ஆட்டத்தில் கோவையை வீழ்த்திய திண்டுக்கல்

நடப்பு டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரின் 9வது போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் திண்டுக்கல் டிராகன் அணிகளுக்கிடையே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.

டிஎன்பிஎல்: திருச்சி அணி த்ரில் வெற்றி

5-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம். ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 7வது நாளான இன்று இரண்டு ஆட்டங்கள்...

மீண்டும் களைகட்டவுள்ள ஐபிஎல் திருவிழா! அட்டவணை வெளியீடு

ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் நடைபெற்ற இந்த ஆண்டுக்கான ஐபிஎல்...
- Advertisment -
TopTamilNews