முதல்வர் ஸ்டாலினிடமிருந்து பறந்த போன் கால்… உறுதியளித்த பிரதமர் மோடி!

 

முதல்வர் ஸ்டாலினிடமிருந்து பறந்த போன் கால்… உறுதியளித்த பிரதமர் மோடி!

முதலமைச்சராகப் பதவியேற்ற ஸ்டாலின் நேற்றே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். தமிழ்நாட்டிற்கு தேவையான ஆக்சிஜனை உடனடியாக வழங்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இச்சூழலில் இன்று பிரதமருக்கு போன் செய்து பேசியிருக்கிறார். அந்த உரையாடலில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தமிழ்நாடு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். அதேசமயம் கொரோனாவுக்கு எதிரான போரில் ஒன்றிய அரசுடன் மாநில அரசு துணை நிற்கும் என்று உறுதியளித்திருக்கிறார்.

முதல்வர் ஸ்டாலினிடமிருந்து பறந்த போன் கால்… உறுதியளித்த பிரதமர் மோடி!

மேலும் தமிழ்நாட்டின் முக்கிய கோரிக்கையான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 மெட்ரிக் டன்னாக உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்திருக்கிறார். அதற்குப் பிரதமர் மோடி இது தொடர்பாகப் பரிசீலிப்பதாக உறுதியளித்திருக்கிறார். மாநிலத்தில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான பரிசோதனைகள் தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், தொற்றால் அதிகம் பாதிக்க்கப்படாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணி[பதில் கவன்ம் செலுத்துமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். அதற்கு ஸ்டாலின் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.