“உக்கிரமடையும் கொரோனா… நீட் தேர்வு நடத்த இது சரியான நேரமா?”

 

“உக்கிரமடையும் கொரோனா… நீட் தேர்வு நடத்த இது சரியான நேரமா?”

நாடு முழுவதும் கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் வீரியம் கற்பனை செய்ய முடியாத அளவிற்கு இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பல்வேறு மாநிலங்களில் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றன. அதேபோல மத்திய அரசின் கீழ் செயல்படும் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 12ஆம் வகுப்பு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

“உக்கிரமடையும் கொரோனா… நீட் தேர்வு நடத்த இது சரியான நேரமா?”

இதற்கு நடுவே மருத்துவப் பட்ட மேற்படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏப்ரல் 18ஆம் தேதி பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.30 மணி வரை ஆன்லைன் மூலம் நீட் தேர்வு நடைபெறுகிறது. இந்தியா முழுவதும் 255 நகரங்களில் தேர்வு நடைபெறவுள்ளது. தற்போது இதுதொடர்பாக திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமர் மோடியிடமும் சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஸ்வர்தனிடமும் கேள்வியெழுப்பியிருக்கிறார்.

அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு சிபிஎஸ்இ பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு, உயிரிழப்புகளுக்கு மத்தியில் நமது மருத்துவர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர். இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் முதுகலை மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு வைப்பதற்கு இது சரியான நேரம் தானா?” என்று குறிப்பிட்டு இருவரையும் டேக் செய்துள்ளார்.