‘திமுக ஆட்சிக்கு வந்தால்..’ : மு.க ஸ்டாலினின் வாக்குறுதி!

 

‘திமுக ஆட்சிக்கு வந்தால்..’ : மு.க ஸ்டாலினின் வாக்குறுதி!

திமுக ஆட்சிக்கு வந்தால் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என பிரச்சாரத்தின் போது மு.க ஸ்டாலின் உறுதியளித்தார்.

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியிருக்கும் சூழலில், அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரங்கள், கூட்டணி பேச்சுவார்த்தை, சசிகலா விடுதலை என அரசியல் களம் பரபரப்பாக இருந்து வரும் சூழலில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தேர்தல் கூட்டணியில் பல்வேறு குழப்பங்கள் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதான கட்சிகளான திமுகவும் அதிமுகவும் ஒவ்வொரு பக்கம் அனல் பறக்க பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றன.

‘திமுக ஆட்சிக்கு வந்தால்..’ : மு.க ஸ்டாலினின் வாக்குறுதி!

‘மக்கள் கிராம சபை கூட்டம்’ என்ற தலைப்பில் தனது முதற்கட்ட பிரச்சாரத்தை முடித்திருக்கும் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என்ற தலைப்பில் நேற்று முதல் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை தொடங்கியிருக்கிறார். திமுக பதவியேற்றவுடன் போர்க்கால அடிப்படையில் 100 நாட்களில் மக்கள் பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற வாக்குறுதியுடன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இந்த நிலையில், வேலூர் மாவட்டம் பள்ளிக்கொண்டா அருகே கந்தனேரியில் இன்று பிரச்சாரம் மேற்கொண்ட மு.க ஸ்டாலின், மக்களின் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும். 100 நாட்களில் குறைகளை தீர்க்க தனி இலாகா ஏற்படுத்தப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கல்வி கடன், விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.