“அதிகாரிகளிடம் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன்… உடனே நடவடிக்கைகள் வேகமெடுத்தன” – அதிரடி காட்டும் ஸ்டாலின்!

“அதிகாரிகளிடம் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன்… உடனே நடவடிக்கைகள் வேகமெடுத்தன” – அதிரடி காட்டும் ஸ்டாலின்!

தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஸ்டாலின் நேற்று பதவியேற்றுக் கொண்டார். பதவியேற்றவுடன் அதிரடி அறிவிப்புகள். உடனடி செயலாக்கம் என ஒவ்வொரு கோப்புகளும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. உத்தரவிட்டால் அன்றே அது நடந்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் ஸ்டாலின் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் மே 10ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார்.

“அதிகாரிகளிடம் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன்… உடனே நடவடிக்கைகள் வேகமெடுத்தன” – அதிரடி காட்டும் ஸ்டாலின்!

இதுதொடர்பாக மாநில மக்களிடம் காணொலி வாயிலாக இன்று உரையாற்றினார். அந்த உரையில், “கொரோனா என்கிற பெருந்தொற்று காலமாக இருப்பதால் அதைக் கட்டுப்படுத்தினோம், முழுமையாக ஒழித்தோம், கொரோனா தொற்றே இனி இல்லை என்கிற சூழ்நிலையை உருவாக்க தமிழக அரசு முழு முயற்சியில் இறங்கியுள்ளது. கொரோனா தொற்று ஒருவரிடமிருந்து இன்னொருவரிடம் பரவாமல் தடுப்பது. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக மீட்கும் இரண்டு குறிக்கோள்களை தமிழக அரசு முழுமையாக முன்னெடுத்து செயல்படுத்தி வருகிறது.

“அதிகாரிகளிடம் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன்… உடனே நடவடிக்கைகள் வேகமெடுத்தன” – அதிரடி காட்டும் ஸ்டாலின்!

இதுகுறித்து நான் அரசு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இன்னொரு ஊரடங்கு அவசியம் என்று அவர்கள் சொல்கிறார்கள். மருத்துவ நிபுணர்களிடம் கேட்டபோதும் அவர்களும் அதையே சொல்கிறார்கள். பயம் வேண்டாம் இது கஷ்டமான காலம் தான்; ஆனால் கடக்க முடியாத காலமல்ல. நோய் நாடி அதன் காரணமும் அறிந்துவிட்டால் நிச்சயம் நோயை குணப்படுத்தி விடலாம்.

“அதிகாரிகளிடம் ஒன்றை குறிப்பிட்டு சொன்னேன்… உடனே நடவடிக்கைகள் வேகமெடுத்தன” – அதிரடி காட்டும் ஸ்டாலின்!

ஆலோசனைக் கூட்டத்தில் அதிகாரிகளிடம் ஒன்றைக் குறிப்பிட்டுச் சொன்னேன். கொரோனா குறித்த உண்மையைச் சொல்லுங்கள் என்று கேட்டுக்கொண்டேன். கொரோனா குறித்த முழு உண்மையை அறிந்து அதை நேருக்கு நேர் சந்திக்க நான் எண்ணியுள்ளேன். அந்த வகையில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான நமது நடவடிக்கைகள் இன்று முதல் வேகம் எடுத்துள்ளன” என்றார்.