‘7.5% உள் ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும்’ – மு.க ஸ்டாலின்

 

‘7.5% உள் ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும்’ – மு.க ஸ்டாலின்

தமிழக அரசு உள் ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முத்துராம லிங்க தேவரின் குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், ‘7.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் சட்ட சிக்கல் ஏற்படாமல் அரசாணையை அரசு அமல்படுத்த வேண்டும். அரசாணையை முன்கூட்டியே பிறப்பிக்காதது தமிழக அரசின் நிர்வாகம் மோசமடைந்ததைக் காட்டுகிறது. இந்த ஆண்டே உள் ஒதுக்கீட்டை அரசு அமல்படுத்த வேண்டும்’ என்று கூறினார்.

‘7.5% உள் ஒதுக்கீடு அரசாணையை முன்பே கொண்டு வந்திருக்க வேண்டும்’ – மு.க ஸ்டாலின்

அரசு பள்ளி மாணவர்களுக்காக கொண்டு வரப்பட்ட 7.5% உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் இருக்கிறார். அவர் விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என பல தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத நிலையிலும், தமிழக அரசு நேற்று அரசாணை வெளியிட்டது. ஏழை மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நிறைவேற்றும் பொருட்டு அரசாணை வெளியிடப்பட்டதாக முதல்வர் விளக்கம் அளித்திருந்தார் என்பது நினைவு கூரத்தக்கது.