முதல்வர் தடுப்பூசி போடவில்லை; தடுப்பூசி 100% சரியா என்பது போக போகதான் தெரியும்- ஸ்டாலின்

 

முதல்வர் தடுப்பூசி போடவில்லை; தடுப்பூசி 100% சரியா என்பது போக போகதான் தெரியும்- ஸ்டாலின்

கடந்த டிசம்பர் 23ஆம் தேதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கிராம சபை கூட்டத்தை தொடங்கி வைத்து மாநிலம் முழுவதும் திமுகவினர் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமசபை கூட்டங்களை நடத்தினர். இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதி மக்கள் கிராம சபை கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். மதுரவாயல் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அடையாளப்பட்டு ஊராட்சியில் திமுக தலைவர் ஸ்டாலின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்றார்.

முதல்வர் தடுப்பூசி போடவில்லை; தடுப்பூசி 100% சரியா என்பது போக போகதான் தெரியும்- ஸ்டாலின்

கூட்டத்தில் பேசிய முக ஸ்டாலின், “22 ஆயிரம் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு மாதத்தில் நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் 1 கோடி பேர் பங்கேற்று உள்ளார்கள். நாளை மறுநாள் அடுத்தகட்ட என்னுடைய பரப்புரை திட்டம் குறித்த அறிவிப்பை வெளியிடுவேன். 234 தொகுதிகளிலும் என்னுடைய பரப்புரை இருக்கும். இருக்கும் நான்கு மாதங்களில் இருப்பதை கொள்ளையடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் 4000கோடி ரூபாய்க்கு டெண்டர் விட்டுள்ளனர். அதிலிருந்து கமிஷன் பெறவே அதிமுக அரசு அவசர கதியில் டெண்டர் விடுத்து வருகின்றனர்.

அதிமுக- பா‌ஜ.க ஆட்சியில் பருப்பு, பால், கேஸ் பெட்ரோல் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை விஷம் போல ஏறியுள்ளது. விரைவில் சசிகலா, குணமடைய வேண்டும் என விரும்புகிறோம். ஏன் முதலமைச்சர், பிரதமர் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை. தடுப்பூசி 100/100 சரியா என்பது போக போகதான் தெரியும். கொரோனா நோயையும் பயன்படுத்தி, இந்த அரசு கொள்ளை அடித்துவிட்டது” எனக் கூறினார்.