உள்ளாட்சித்துறை ஊழலாட்சித்துறையாக மாறிவிட்டது- முக ஸ்டாலின்

 

உள்ளாட்சித்துறை ஊழலாட்சித்துறையாக மாறிவிட்டது- முக ஸ்டாலின்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் உள்ள பிடிகே தனியார் கல்லூரி வளாகத்தில் திமுக சார்பில் நடைபெறும்‌ மக்கள் கிராமசபை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், “நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்றதற்கு அப்போது நடத்தப்பட்ட ஊராட்சி சபை கூட்டம் தான் காரணம், அதேபோல் வருகின்ற சட்டபேரவை தேர்தலில் திமுக மாபெரும் வெற்றி பெற உள்ளது. அதற்கு காரணமாக இந்த மக்கள் சபை கூட்டம் அமையும், இதுவரை நடந்த மக்கள் கிராம சபை கூட்டத்திலேயே விராலிமலை கிராம சபை கூட்டம் தான் மிக பெரிய கூட்டமாக அமைந்துள்ளது, இதை மற்ற மாவட்டங்கள் வெல்ல முடியுமா என்பது தெரியவில்லை, இந்த கூட்டத்தில் மக்கள் எழுச்சியை பார்த்து பேசாமல் அப்படியே மக்களின் முகத்தை மட்டும் பார்த்துக்கொண்டே நின்றுவிடலாமோ என்பது போல் உள்ளது.

உள்ளாட்சித்துறை ஊழலாட்சித்துறையாக மாறிவிட்டது- முக ஸ்டாலின்

எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோளை ஏற்று நான் இனிமேல் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை முதல்வர் பழனிச்சாமி என்று தான் சொல்வேன், திமுகவினரும் அப்படியே அழையுங்கள், எடப்பாடி பழனிச்சாமி என்று அழைக்க வேண்டாம், இது எடப்பாடி தொகுதி மக்களின் வேண்டுகோள். நான் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்ததால் தற்போதைய உள்ளாட்சித்துறை அமைச்சரை நினைத்தாலே அவமானமாக இருக்கிறது, உள்ளாட்சித்துறை ஊழலாட்சி துறையாக மாறிவிட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஊழலில் திழைக்கிறார்” எனக் கூறினார்.