Home அரசியல் திமுகவினர் செல்லாத கோயில்கள் இல்லை; நாங்களும் பக்திமான்கள்தான் - ஸ்டாலின்

திமுகவினர் செல்லாத கோயில்கள் இல்லை; நாங்களும் பக்திமான்கள்தான் – ஸ்டாலின்

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த கோணம்பேடு பகுதியிலுள்ள கடும்பாடி சின்னம்மன் ஆலயம் அருகில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், “கலெக்சன் கமிஷன் ஆட்சிக்கு ஒரு முடிவு கட்டுவோம். தலைவர் கலைஞர் கண்ட கனவை நினைவாக்க நீங்கள் அரும்பாடு படவேண்டும். தை பிறந்தால் வழி பிறக்கும். திமுக இந்துக்களுக்கு எதிரி என பாஜக கூறுகிறது. ஆனால் என் மனைவி செல்லாத கோயில்கள் இல்லை. திமுகவினர் செல்லாத கோயில்கள் இல்லை. பக்தி என்பது தனிப்பட்ட விருப்பம்.

உங்களுக்கு வாழ்த்துச் சொல்ல மட்டுமல்ல. உங்கள் வாழ்த்துக்களையும் பெறவே இங்கு வந்துள்ளேன். நாளை திருப்பெரும்புதூரில் உள்ள என் தோட்டத்தில் நான் வளர்க்கும் மாடுகளை வைத்து மாட்டுப் பொங்கல் கொண்டாட உள்ளேன். தை முதல் நாள் தான் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடப்பட வேண்டும். தமிழ் அறிஞர்கள் ஆய்வு செய்து கூறியது இது தான். அரசாணையும் வெளியிட்டு சில ஆண்டுகளாகவே இந்நாளைத்தான் புத்தாண்டாக கொண்டாடுகிறோம். தவழ்ந்து தவழ்ந்து வந்து பதவியைப் பெற்றவர் எடப்பாடி பழனிசாமி. அவர் எப்படி மக்களைப் பற்றி சிந்திப்பார். கலைஞரின் பிள்ளை என்பதால் இந்த இடத்திற்கு வந்துவிட்டேன் என்று நினைக்கிறீர்களா? ஸ்டாலின் என்றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்று கலைஞரிடம் பாராட்டு வாங்கி இந்த இடத்திற்கு வந்துள்ளேன். எடப்பாடியின் பாராட்டுகள் எதுவும் எனக்கு தேவையில்லை. பாராட்டும் அளவிற்கு அவருக்கு தகுதியும் இல்லை. முதன் முதலில் சென்னையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மேயர் அடியேன் தான். கட்சியிலும் ஆட்சியிலும் படிப்படியாக ஒவ்வொரு பொறுப்புகளையும் வகித்து இன்று இந்த இடத்திற்கு வந்திருக்கிறேன்

கடும் குளிரைத் தாங்கிக் கொண்டு பஞ்சாப், ஹரியானாவிலிருந்து குடும்பம் குடும்பமாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். போராட்டக் களத்தில் குளிராலும், தற்கொலை செய்து கொண்டும் இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். விவசாயக் கடன் கட்டாயம் தள்ளுபடி செய்யப்படும். 4 மாதம் தான். பொறுத்திருங்கள்” எனக் கூறினார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

ஏப்ரல் மாதத்துடன் பழைய ரூ.5,10,100 நோட்டுகள் செல்லாது- ரிசர்வ் வங்கி

மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5,10,100 நோட்டுக்கள் திரும்பப்பெறப்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. கருப்பு பணத்தை ஒழிக்க கடந்த 2016 ஆம் ஆண்டு...

அருகம்புல் ஜூஸ் தெரியும்… கோதுமை புல் ஜூஸ் பயன்கள் தெரியுமா?

ஹெல்த்தி ஃபுட் ஆர்வலர்களின் தேர்வாக அருகம்புல் சாறு உள்ளது. காலையில் வாக்கிங் செல்பவர்கள் ஒரு டம்ளர் அருகம்புல் ஜூஸ் குடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது வழக்கமாக மாறிவிட்டது. அதை விட அதிக...

சசிகலா விடுதலையாகி வந்து அரசியலில் நுழையவேண்டும்- பிரேமலதா விஜயகாந்த்

சட்டமன்ற தேர்தலில் விஜயகாந்த் அனுமதி அளித்தால் போட்டியிடுவேன் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான...

ஐசியூவில் சிகிச்சை பெறும் சசிகலா உணவு உட்கொள்கிறார்! மருத்துவமனை அறிக்கை

சொத்துகுவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வந்த சசிகலாவுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவர் சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டார்....
Do NOT follow this link or you will be banned from the site!