Home தமிழகம் அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்- முக ஸ்டாலின்

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்- முக ஸ்டாலின்

திமுக சிறுபான்மையினர் அணி சார்பாக “நல்லாட்சி மலர்ந்திட இதயங்களை இணைப்போம்” எனும் தலைப்பிலான கருத்தரங்கம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. திமுக சிறுபான்மையினர் அணி சார்பில், நடைபெறும் இந்த கருத்தரங்கில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு தலைமை உரையாற்றினார். இந்த கருத்தரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் ஜவஹிருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி, சட்டமன்ற உறுப்பினர் அபுபக்கர் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்- முக ஸ்டாலின்
அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்- முக ஸ்டாலின்

அப்போது பேசிய ஸ்டாலின், “சிறுபான்மை தலைவர்களுக்கு ஒன்று சொல்ல கடமைபட்டுள்ளேன். எண்ணிக்கையில் ஒன்றுமில்லை, எவ்வளவு இடம் என்பது முக்கியமில்லை, நாம் வென்று ஆட்சி அமைக்கப் போகிறோம்.! நடைபெறப் போவது நம் ஆட்சி.! கருணாநிதியின் ஆட்சியை உடன் இருந்து பார்த்தவன், அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன். தேர்தலின் போது கலைஞர் எவ்வாறு நடந்துகொள்வார் என்பதை அருகிலிருந்து பார்த்தவன் நான், அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் இருப்பேன். இன்னும் 4 மாதத்தில் நல்ல ஆட்சி மலரும். பத்தி தனி சொத்து, ஒழுக்கம் பொது சொத்து. பத்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்றி விட்டனர்.

பக்தியை அரசியல் வியாபார பொருளாக மாற்ற சிலர் முயற்சி செய்கிறார்கள். தங்களது கொள்கைகள், சாதனைகளை சொல்லிக்கொள்ள முடியாதவர்கள்தான் ஆன்மீகத்தில் பிரிவினையை ஏற்படுத்த பார்க்கிறார்கள். அண்ணா – கருணாநிதி இணைப்பு பாலமாக இருந்தது இஸ்லாமிய விழா தான். கருணாநிதி வாழ்க்கையில் இணைத்தும் பிணைந்தும் இருந்தவர்கள் இஸ்லாமியர்கள். இந்தியை ஆட்சி மொழியாக மாற்ற கூடாது. தமிழ் தான் இருக்க வேண்டும் என்று கூறியவர் காகித மில்லத். சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் பாஜகவும் அதிமுகவும் தான்.

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்- முக ஸ்டாலின்

பாஜக குடியுரிமை சட்டம், முத்தலாக் சட்டம் என சிறுபான்மையினரை பாதிக்கும் வகையில் கொண்டு வந்த அனைத்து திட்டத்திற்கும் அதிமுக ஆதரித்து இருக்கிறது, இது தான் அண்ணா வழியை பின்பற்றுவதா? ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன் என்று கூறினார் ஆனால் தற்போது அவர்களுடன் கூட்டணி வைத்து இருக்கிறார் எடப்பாடி. ஜெயலலிதாவின் எந்த கனவை நிறைவேற்றி இருக்கிறார் எடப்பாடி? எடப்பாடிக்கு சிறுபான்மையினரை பற்றி பேச அருகதை இல்லை, குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்த எடப்பாடி இஸ்லாமியருக்கு துரோகம் செய்தார். கார்ப்பரேட்களுக்கு பாதகம் இல்லமால் ஆட்சியை நடத்துவதுதான் மோடியின் கொள்கை. வேளாண் சட்டத்தை எதிர்த்து டெல்லியில் 1 மாதத்தை தாண்டி விவசாயிகள் போரடி வருக்கிறார்கள், அவர்கள் என்ன சிறுபான்மையினரா ? அனைத்து இனத்திற்கும் தான் துரோகம் செய்து இருக்கிறார்” எனக் கூறினார்.

அப்பனுக்கு பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறேன் என்பதை நிச்சயம் நிரூபிப்பேன்- முக ஸ்டாலின்
-Advertisement-

மாவட்ட செய்திகள்

-Advertisement-

சமீபத்திய செய்திகள்

ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து 58 சரவன் நகை கொள்ளை!

கரூர் கரூர் அருகே ஓட்டல் உரிமையாளர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 58 சரவன் தங்க நகைகளை திருடி சென்றனர். கரூர்...

சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக இருந்த 3 பெண்கள் முன்ஜாமீன் மனு – உயர் நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு!

செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சுசில்ஹரி சர்வதேச பள்ளியில் படித்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யபட்டுள்ளார். மாணவிகளை மூளைச் சலவை செய்ததாக...

2 ஜிபி இலவச டேட்டா திட்டத்தை செயல்படுத்த வேண்டும் – கமல்ஹாசன் ட்வீட்!

கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருக்கும் நிலையில் ஏழை மாணவர்களின் நலன் கருதி ஆன்லைன் வகுப்பில் பங்கேற்பதற்காக தினமும் 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கும் திட்டத்தை...

’’அணில் ராமேஸ்வரம் to இலங்கைக்கு பாலமே கட்டியிருக்கும் போது, கரண்ட் கம்பிய கடிக்காதா?’’

மின்தடை குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன ’அணில்’ பதில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. மின் கம்பிகளின் மீது அணில்கள் ஓடுவதால் கம்பிகள் ஒன்றோடு...
- Advertisment -
TopTamilNews