மக்களை ஏமாற்றுகிற ஆட்சி, ஏய்க்கிற ஆட்சி, விவசாயிகளை வேரோடு புடுங்கி எறியும் ஆட்சி- முக ஸ்டாலின்

 

மக்களை ஏமாற்றுகிற ஆட்சி, ஏய்க்கிற ஆட்சி, விவசாயிகளை வேரோடு புடுங்கி எறியும் ஆட்சி- முக ஸ்டாலின்

தமிழகம் மீட்போம் என்ற பெயரில் இராமநாதபுரத்தில் நடைபெறும் சிறப்பு தேர்தல் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், “சிலர் ஆன்மீகத்தை காரணம் காட்டி திமுகவை வீழ்ந்தலாம் என எண்ணுகிறார்கள். மக்களுக்கு சேவை செய்வது தான் மகத்தான ஆன்மீகம் என சுவாமி விவேகானந்தர் இதே மண்ணில் 1897இல் பேசும் போது கூறியுள்ளார். ஏழைகளை காக்க கூடியவர்கள் தான் உண்மையிலேயே ஆன்மீகத்தை நேசிப்பவர்கள்.

நாம் தான் மக்களுக்கான பணியை செய்து கொண்டிருக்கிறோம் என இங்கே சிலர் வெறுமனே நடித்து கொண்டிருக்கிறார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்றார் அண்ணா. ஏழைகள் சிரிக்க உருவாக்கப்பட்ட கட்சி தான் திமுக. ஒடுக்கப்பட்டவர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், பட்டியலின மக்கள் முன்னேற பாடுபடும் கட்சி தான் திமுக. தண்ணீர் இல்லாத ஊர் ராமநாதபுரம் என்ற பொது வழக்கை மாற்றியது திமுக. குடிநீர் இல்லாமல் தவித்த மக்களுக்கு 616 கோடியில் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்தினோம். அதை செயல்படுத்தும் பொறுப்பு என்னிடத்திலே வழங்கப்பட்டது. விரைவாக முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு போட்டேன். 3 வருடம் ஆகும் என திட்டம் தீட்டப்பட்டது ஆனால் 2 வருடங்களுக்குள் மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

மக்களை ஏமாற்றுகிற ஆட்சி, ஏய்க்கிற ஆட்சி, விவசாயிகளை வேரோடு புடுங்கி எறியும் ஆட்சி- முக ஸ்டாலின்

5000 சுனாமி குடியிருப்புகள் கட்டிக் கொடுத்து கான்கிரீட் வீடுகளில் மீனவர்கள் தங்கும் வசதியை ஏற்படுத்தி கொடுத்தோம். அடுத்து திமுக ஆட்சி அமையும் போது என்னென்ன திட்டங்கள் செய்ய வேண்டும் என்பதை திட்டம் தீட்டி வைத்துள்ளோம். குந்துகால் துறைமுகம் தற்போது பயனற்ற நிலையில் உள்ளது. ஒரு திட்டம் தீட்டும் போது மீனவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்காமல் திட்டங்கள் தீட்டுகிறார்கள் படகுகளை பாதுகாப்பாக நிறுத்த வேண்டும் என்றால் தூண்டில் வளைவு துறைமுகம் அமைக்க வேண்டும். ஆனால் அதிமுக ஆட்சியில் கமிஷனுக்காக மட்டுமே துறைமுகங்கள் கட்டப்பட்டது.

புயலின் காரணமாக 135 வீடுகள் சேதமடைந்துள்ளது. 61 படகுகள் பாம்பனில் சேதமடைந்துள்ளது. 2 பேர் இறந்துள்ளனர். இதுவரை புயல் தொடர்பான பாதிப்புகள் குறித்து எந்த கணக்கெடுப்பும் நடத்தவில்லை. விரைவாக நிவாரண உதவிகள் வாழங்கவில்லை. உடனடியாக செய்வது தான் நிவாரணம். இது மக்களை ஏமாற்றுகிற ஆட்சி, மக்களை ஏய்க்கிற ஆட்சி, சுரண்டுகிற ஆட்சி, மக்களை வெறுக்கிற ஆட்சி. விவசாயிகளை வேரோடு புடுங்கி எறியும் ஆட்சி” எனக் கூறினார்.