நான் சீமான் வீட்டு பிள்ளை அல்ல; சாமானிய வீட்டு பிள்ளை- முக ஸ்டாலின்

 

நான் சீமான் வீட்டு பிள்ளை அல்ல; சாமானிய வீட்டு பிள்ளை- முக ஸ்டாலின்

ஆரணி சேவூர் ஊராட்சிக்குட்பட்ட இரகுநாதபுரம் கூட்ரோடு ஆர்டிஓ ஆபிஸ் அருகில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பிரச்சாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின ஈடுபட்டார்.இந்த பொதுக்கூட்டத்தில் 7000 க்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் தங்களின் குறைகள் அடங்கிய மனுக்களை ஸ்டாலினிடம் அளித்தனர்.

பின்னர் பொது கூட்டத்தில் உரையாற்றிய முக ஸ்டாலின், “நான் நலம் நீங்கள் நலமா? நான் ரெடி நீங்கள் ரெடியா? உங்கள் அனைவரையும் வருக வருக என வரவேற்கிறேன் உங்கள் மனுக்களை கொடுத்து இரசிது பெற்று கொள்ளவும். 234 தொகுதியிலும் நான் தான் ஜெயிக்கபோறேன். உங்களுடைய மனுக்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறேன். உங்கள் முன்னிலையில் மனுக்கள் அடங்கிய பெட்டிக்கு சில் வைக்கிறேன். ஆட்சிக்கு வந்தவுடன் அதிகாரிகள் முலமாக துரிதமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நான் சீமான் வீட்டு பிள்ளை அல்ல; சாமானிய வீட்டு பிள்ளை- முக ஸ்டாலின்

கண்களில் கனவோடு இதயத்தில் ஏக்கத்தோடு காத்திருக்கும் தமிழக மக்களுக்கு மீண்டும் வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய நம்பிக்கையை நான் எனது சொத்தாக நினைத்து உண்மையாக காப்பாற்றுவேன். திராவிட ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன். முதல் 100 நாட்களில் உங்கள் பிரச்சனைகளை தீர்த்து வைப்பேன். 14 வயதில் திராவிட கழகத்தில் இணைந்து பணியை தொடங்கி தமிழகத்தில் என் கால் பதியாத இடமே இல்லை, பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்கு பிறகு கலைஞர் தலைமையில் 184 இடங்களை பிடித்தது திமுக ஆட்சி அமைத்தது. 2021 தேர்தலும் அப்படிதான் இருக்கும்,

உங்களுடைய சுக துக்கத்தை பங்கேற்கிறவன்தான் இந்த ஸ்டாலின். நான் சீமான் வீட்டு பிள்ளை இல்லை நான் சாமானியரான கலைஞர் வீட்டு பிள்ளை. கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து துறைகளும் படு பாதளத்தில் சென்றுள்ளது. உங்களுடைய கோரிக்கைகளை என் முதுகில் ஏற்றி உள்ளீர்கள். நிச்சியம் நிறைவேற்றப்படும்” என நிறைவு செய்தார்.