தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

 

தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 113-வது ஜெயந்தி விழா மற்றும் 58வது குருபூஜை இன்று (30 ஆம் தேதி) கொண்டாடப்படுகிறது. இதனால் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு குருபூஜை நடைபெறும்.

தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

இந்நிலையில் தேவரின் ஜெயந்தி, குருபூஜையையொட்டி மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு நேரில் மரியாதை செலுத்தினார் மு.க.ஸ்டாலின்.

தேவர் சிலைக்கு மு.க.ஸ்டாலின் மரியாதை!

முன்னதாக முத்துராமலிங்க தேவர் ஜெயந்தி குருபூஜையொட்டி அவரது சிலைக்கு துணை முதல்வர் ஓபிஎஸ் , அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர். அத்துடன் சிலைக்கு கீழே உள்ள படத்திற்கு முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.