திமுக தலைவராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலின்

திமுக தலைவராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலின்

முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவுக்குப் பிறகு திமுக தலைவராக அவரது மகனும் கட்சியின் செயல் தலைவராக இருந்து வந்த மு.க. ஸ்டாலின் திமுகவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆகஸ்ட் 28ஆம் தேதி 2018 ஆம் ஆண்டு பொதுக்குழுவை கூட்டி கட்சி நிர்வாகிகள் முன்னிலையில் அவர் தனது தலைவர் பதவியை ஏற்றுக் கொண்டார்.

திமுக தலைவராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலின்

அதன்பிறகு மக்களவைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல் என தேர்தல் களங்களை கண்டு எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஸ்டாலின் திமுக தலைவராக பதவியேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது.

திமுக தலைவராக 3வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள மு.க.ஸ்டாலின்

இந்நிலையில் திமுக தலைவராக 3 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளதால், கலைஞர் கருணாநிதியின் நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அவருடன் துரைமுருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.