நவ.16 ஆம் தேதி பள்ளிகள் திறக்க மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

 

நவ.16 ஆம் தேதி பள்ளிகள் திறக்க மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

தமிழகத்தில் நவம்பர் 16 முதல் பள்ளிகள், கல்லூரிகளை திறக்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நவ.16 ஆம் தேதி பள்ளிகள் திறக்க மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

தமிழகத்தில் வரும் நவ.30 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில் வரும் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

நவ.16 ஆம் தேதி பள்ளிகள் திறக்க மு.க.ஸ்டாலின் எதிர்ப்பு!

இந்நிலையில் இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “நவம்பர் 16 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் முதலமைச்சர் அவசரக் கோலத்தில் அறிவித்திருக்கிறார். மாணவர்களின் பாதுகாப்பு -விடுதி- உணவு போன்றவை குறித்த குழப்பங்கள் நிலவுகின்றன. கொரோனாவின் இரண்டாவது அலை குறித்த உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டதா? துவக்க பள்ளிகளைவிட உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் அதிகம் பாதிப்பு ,ஆசிரியர்களுக்குள் கொரோனா பரவல் அதிகம் போன்ற ஆராய்ச்சி முடிவுகள் வெளியாகி இருக்கின்றன.

இத்தகைய அறிவிப்புகளில் எடப்பாடி அதிமுக அரசின் நிர்வாக குழப்பம் தலைதூக்கி நிற்கிறது. தனது தொடர் தோல்விகளுக்கு மக்கள் ஒத்துழைக்கவில்லை என்று பழி சுமத்துவது முதலமைச்சருக்கு கைவந்த கலை. வடகிழக்கு பருவமழை, தட்பவெட்ப மாறுபாடுகள், பருவகால நோய்களெல்லாம் கொரோனாவுடன் சேர்ந்து கொண்டு மாணவர்களுக்கு மிகப்பெரும் ஆபத்தை விளைவிக்கக் கூடும். எனவே பொங்கல் விடுமுறை முடிந்து 2021 ஜனவரி இறுதியில் அப்போது இருக்கும் சூழ்நிலைகளை ஆய்வு செய்து பள்ளிகளை திறக்கலாம் ” என்று வலியுறுத்தியுள்ளார்.