• February
    21
    Friday

Main Area

Main



சூடான அரசியல் களம்...கூலாக பள்ளி வாழ்க்கைக்கு திரும்பிய மு.க.ஸ்டாலின்

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 50 ஆண்டுகள் கழித்து பள்ளி நண்பர்களைச் சந்தித்துள்ளார்.

திமுகவில் அடிப்படை உறுப்பினர், இளைஞரணி தலைவர்,மேயர்,  எம்எல்ஏ, செயல் தலைவர், தற்போது  திமுகவின் தலைவர் என கரடுமுரடான அரசியல் பயணத்தில் லாவகமாக பயணம் செய்து கொண்டிருப்பவர் முக ஸ்டாலின்.  இவர் பரபரப்பான அரசியல் களத்தில் மீண்டும் பள்ளி வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.1965-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை 6 முதல் 11ம் வகுப்பு வரையில் திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் சென்னை சேத்துப்பட்டில் அமைந்துள்ள சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில் பயின்றார் .

ttn

இந்நிலையில் 1970-ம் ஆண்டு சென்னை கிருத்துவக் கல்லூரி பள்ளியில் பயின்ற மாணவர்களின் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் பள்ளியின் முன்னாள் மாணவரான ஸ்டாலின் கலந்துகொண்டார். 11 வகுப்பில் தன்னுடன் பயின்ற மாணவர்களைச் சந்தித்துப் பேசி மகிழ்ந்த ஸ்டாலினிடம் அவர்கள் தங்களை அறிமுகம் படுத்துக்கொண்டனர். பின் பள்ளியைச் சுற்றிப்பார்த்த ஸ்டாலின் தான் பயின்ற வகுப்புக்குச் சென்று இளமைக்காலத்தை  நினைவுகூர்ந்தார்.

ttn

ஒருமணிநேரம் சந்திப்புக்குப் பிறகு அங்கிருந்து புறப்பட்டார். அப்போது அங்கிருந்த சிலர், கருணாநிதி முதல்வராக இருந்தபோதும் எளிமையான, அமைதியான மாணவராக ஸ்டாலின் இருந்தார் என்றும் இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி சிறை சென்றார் என்பதையும்  நினைவுபடுத்தி மகிழ்ந்தனர். 


 

2018 TopTamilNews. All rights reserved.