“ஆளுநரிடம் வேறு விஷயங்களும் பேசினோம்; அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது” – மு.க ஸ்டாலின்

“ஆளுநரிடம் வேறு விஷயங்களும் பேசினோம்; அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது” – மு.க ஸ்டாலின்

எழுவர் விடுதலை தொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று ஆளுநர் பன்வாரிலாலை சந்தித்தார்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிக்கிய பேரறிவாளன், நளினி, முருகன் உட்பட 7 பேர் 30 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்தவையே. அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், இது தொடர்பாக தமிழக ஆளுநர் முடிவெடுத்துக் கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்து விட்டது. இருப்பினும், அந்த முடிவை கிடப்பில் ஆளுநர், எழுவர் விடுதலை தொடர்பாக எந்த முடிவையும் எடுக்கவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நேரடி தொடர்பு இல்லாத பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும் என தமிழ் திரையுலகினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

“ஆளுநரிடம் வேறு விஷயங்களும் பேசினோம்; அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது” – மு.க ஸ்டாலின்

இந்த நிலையில், எழுவர் விடுதலை தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மு.க ஸ்டாலின் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் வலியுறுத்தியுள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநரை நேரில் சந்தித்த ஸ்டாலின், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

“ஆளுநரிடம் வேறு விஷயங்களும் பேசினோம்; அதையெல்லாம் வெளியே சொல்ல முடியாது” – மு.க ஸ்டாலின்

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மு.க ஸ்டாலின், 7 பேர் விடுதலையில் மனிதாபிமான அடிப்படையில் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினோம் என்று கூறினார். அதற்கு ஆளுநர் சட்ட விளக்கங்களை அளித்ததாக கூறிய ஸ்டாலின், 7 பேரின் விடுதலை தொடர்பாக பரிசீலித்து முடிவெடுப்பதாக ஆளுநர் கூறியதாகவும் தெரிவித்தார். மேலும், ஆளுநரிடம் வேறு விஷயங்கள் குறித்து பேசியதாகவும் அதனை வெளியில் சொல்ல முடியாது என்றும் தெரிவித்தார்.