விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

 

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

விடுபட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்- முதல்வர் ஆலோசனை

கடந்த முறை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்ட போது புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதால் விழுப்புரம், நெல்லை, தென்காசி, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது, இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவையடுத்து தேர்தல் நடத்துவது தொடர்பாக முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் மற்றும் துறைசார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் விடுபட்டுள்ள 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தி அதன் முடிவுகளை வெளியிட வேண்டும் என்றும், கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை நடத்தாமில் இருப்பது ஏற்புடையது இல்லை என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்தது. இதையடுத்து உள்ளாட்சி தேர்தலை நீதிமன்றம் குறிப்பிட்ட நாட்களுக்குள் நடத்தி முடிப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார்.