மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு!

 

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு!

நிவர் புயல் சென்னையில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. சென்னையில் இருந்து 300 கி.மீ தொலைவில் புயல் மையம் கொண்டிருப்பதால், பரவலாக கனமழை பெய்து வருகிறது. கடந்த 2015 ஆண்டு ஏற்பட்ட பாதிப்பை போல மீண்டும் நிகழாத வண்ணம் இருக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சென்னையில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவுடன், ராணுவத்தினரும் தயார் நிலையில் இருக்கின்றனர்.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மு.க ஸ்டாலின் நேரில் ஆய்வு!

மழை பாதிப்பில் இருந்து மக்களை காக்கும் பொருட்டு தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள், முகாம்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தற்போது செம்பரம்பாக்கம் ஏரியும் திறக்கப்பட்டிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் வெள்ள நிவாரண முகாம்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்தார். பெரம்பூர், எழும்பூரில் உள்ள இடங்களில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார்.