‘மருத்துவமனையில் ரஜினிகாந்த்’: நலம் விசாரித்தார் மு.க ஸ்டாலின்

 

‘மருத்துவமனையில் ரஜினிகாந்த்’: நலம் விசாரித்தார் மு.க ஸ்டாலின்

கொரோனாவால் நிறுத்தப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படத்தின் ஷூட்டிங் கடந்த 14ம் தேதி தொடங்கியது. ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி பிலிம் சிட்டியில் ஷூட்டிங் நடைபெற்று வந்த நிலையில், அப்படக்குழுவினர் 4 பேருக்கு கொரோனா உறுதியானது. ஷூட்டிங்கில் கலந்து கொண்ட நடிகர்கள் யாருக்கும் கொரோனா இல்லை என படக்குழு அறிவித்தது. இருப்பினும், நடிகர் ரஜினிகாந்த் ஹைதராபாத்தில் உள்ள ஓட்டலில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார்.

‘மருத்துவமனையில் ரஜினிகாந்த்’: நலம் விசாரித்தார் மு.க ஸ்டாலின்

இன்று பிற்பகல் நடிகர் ரஜினிகாந்த் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக, மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டருந்தது. இரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்திருந்தது.

‘மருத்துவமனையில் ரஜினிகாந்த்’: நலம் விசாரித்தார் மு.க ஸ்டாலின்

அண்ணாத்த படத்தின் ஷூட்டிங் முடிந்த பிறகு, ரஜினி கட்சி தொடங்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில் அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில், ஹைதராபாத்தில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினியிடம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் நலம் விசாரித்திருக்கிறார். தொலைபேசி வாயிலாக உடல்நலம் குறித்து அவர் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகிறது.