“மறக்க முடியாத தருணம் எது?” – கேள்வி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ஸ்டாலின்!

 

“மறக்க முடியாத தருணம் எது?” – கேள்வி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ஸ்டாலின்!

தமிழக தேர்தல் களத்தில் இன்றே பிரச்சாரத்துக்கான கடைசி நாள். நாளை மறுநாள் தமிழகத்தை ஆட்சி செய்யப் போவது யார் என்பதை தீர்மானிக்கும் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. எப்படியாவது அதிமுக ஆட்சியை ஒழித்தே ஆக வேண்டும் என்ற தன் முனைப்பில் உடல்நலத்தையும் பொருட்படுத்தாமல் உடலை வருத்தி திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்துவருகிறார்.

“மறக்க முடியாத தருணம் எது?” – கேள்வி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ஸ்டாலின்!

இச்சூழலில் தனியார் செய்தித் தொலைக்காட்சி நிறுவனம் ஸ்டாலினுடன் விவாதம் செய்ய ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஸ்டாலின் செய்வாரா என்ற வாசகத்தை முன்வைத்து நடத்தப்பட்ட நிகழ்ச்சியில் இளைஞர்களுடன் ஸ்டாலின் உரையாடினார். நீங்கள் ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் செய்வீர்கள், என்ன மாற்றத்தைக் கொண்டுவரப் போகிறீர்கள் உள்ளிட்ட கேள்விகள் கேட்கப்பட்டன. ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாகப் பதில் சொல்லிக் கொண்டிருந்தார் ஸ்டாலின்.

source: sun news

நிகழ்ச்சியின் நிறைவுப் பகுதியில் பெண் ஒருவர், “உங்கள் அரசியல் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்ன” என்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு உருக்கமாகப் பதிலளித்த ஸ்டாலின், தந்தை கருணாநிதியின் மறைவையும், அவரை அடக்கம் செய்ய இடம் தர மறுத்த எடப்பாடியின் போக்கையும் பற்றி பேசினார். தனக்கு வந்த அந்த சோதனை வேறு யாருக்கும் வரக் கூடாது என்று கூறிய அவர், நீதிமன்றம் வாயிலாக நீதி கிடைத்து தந்தையின் கடைசி ஆசையான அண்ணாவிற்கு அருகில் அடக்கம் செய்து நிறைவேற்றியதே மறக்க முடியாத தருணம் என்றார்.

“மறக்க முடியாத தருணம் எது?” – கேள்வி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ஸ்டாலின்!

இதைச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே குரல் கம்மி, அவரின் கண்களில் கண்ணீர் தத்தளித்தது. இறுதியில் கண் கலங்கி அழுதே விட்டார். இது அங்கிருந்தவர்களை சோகத்தில் ஆழ்த்தியது. நீதிமன்ற தீர்ப்பு வந்த உடன் ஸ்டாலின் அழுததை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டார்கள். இந்தக் குற்றச்சாட்டை ஸ்டாலின் பிரச்சாரங்களில் சொல்லியிருக்கிறார். இதற்கு நேற்று விளக்கமளித்த எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆரின் மனைவி ஜானகியையும் காமராஜரையும் அடக்கம் செய்ய கருணாநிதி இடம் தர மறுத்ததால், தானும் அவருக்கு மறுத்ததாகக் கூறினார்.

“மறக்க முடியாத தருணம் எது?” – கேள்வி நிகழ்ச்சியில் கண்ணீர் விட்ட ஸ்டாலின்!
அடக்கம் செய்ய இடம் கேட்க பழனிசாமியை சந்தித்த ஸ்டாலின்

உண்மை என்ன?

“காமராஜரின் உடல் குடும்ப வழக்கப்படி எரிக்கப்பட்டது. யாரும் புதைக்க இடம் கேட்கவில்லை. உண்மை தெரியாமல் முதலமைச்சர் பேசுகிறார்” என காமராஜரின் பேத்தி மயூரி நேற்றே கூறி மூக்கை உடைத்துவிட்டார். அதேபோல ஜானகி இறந்த பிறகு ஜானகி தரப்பிலிருந்தோ, அப்போது அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவோ கருணாநிதியிடம் அடக்கம் செய்ய இடம் கேட்கவில்லை என்பதே வரலாறு சொல்லும் உண்மை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரே ஓட்டுக்காக பொய் பிரச்சாரங்கள் செய்வது வேடிக்கையாக இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கடிந்துகொள்கின்றனர்.