“கலைஞர் வழியில் திருநங்கையர்களை காப்போம்”

 

“கலைஞர் வழியில் திருநங்கையர்களை காப்போம்”

2008ஆம் ஆண்டு ஏப்ரல் 15ஆம் தேதி முதலமைச்சராக இருந்த கருணாநிதி திருநங்கைகளுக்கென தனி நலவாரியத்தை அமைத்தார். இந்நலவாரியம் அமைக்கப்பட்ட நாளை திருநங்கையர் நாளாக அறிவிக்க வேண்டும் என்ற திருநங்கைகளின் கோரிக்கை அவரிடம் கோரிக்கை விடுத்தனர். அதனையேற்ற ஏற்ற கருணாநிதி, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ஆம் தேதி திருநங்கையர் நாளாகக் கொண்டாட 2011ஆம் ஆண்டு மார்ச் 11ஆம் தேதி உத்தரவிட்டார்.

“கலைஞர் வழியில் திருநங்கையர்களை காப்போம்”

அன்றிலிருந்து இன்று வரை (ஏப்ரல் 15) திருநங்கையர் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. திருநங்கைகள் என்றால் பாலியல் தொழில் செய்பவர்கள்தான் என்ற தவறான புரிதலைத் தகர்த்தெறியவும் அவர்களுக்கான சிறப்புகளைப் போற்றி பாதுகாக்கும் வகையில் இந்த நாள் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

“கலைஞர் வழியில் திருநங்கையர்களை காப்போம்”

திருநங்கையர்களுக்கு வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “ஆண் – பெண் இரு பாலினத்தவர் போலவே திருநங்கையரும் அனைத்து நிலைகளிலும் சம உரிமை பெற்று வாழ்ந்திட வேண்டும் என்பதை நம் அனைவருக்கும் நினைவூட்டும் வகையில் இன்று திருநங்கையர் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது.

திருநங்கை எனும் சொல்லுக்கு அரசாங்கத்தின் அங்கீகாரத்தை அளித்து அவர்களின் நலன் காக்க தனி வாரியம் அமைத்தவர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் திராவிட முன்னேற்றக் கழகம் என்றும் திருநங்கையர் /திருநம்பியர் உரிமைகளைக் காத்து நிற்கும் என்ற உறுதியினை வழங்கி, திருநங்கையர் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.