“கொரோனாவிலிருந்து விடுபடும் நன்னாளுக்கு ஈகை திருநாள் துணையாகட்டும்” – வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

“கொரோனாவிலிருந்து விடுபடும் நன்னாளுக்கு ஈகை திருநாள் துணையாகட்டும்” – வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

இஸ்லாமியர்களின் புனிதப் பண்டிகைகளில் ரமலான் சிறப்புவாய்ந்த ஒன்று. இறைவனின் திருவசனங்கள் இறங்கிய மாதம் என்பதால் ரமலான் மாதத்துக்குக்கென்று தனிச்சிறப்பு எப்போதுமே இருக்கும். இந்த மாதத்தில் சூரிய உதயத்துக்கு முன் உணவு உண்டு, இடையில் அன்னம், தண்ணீர் இல்லாமல் சூரிய அஸ்தமனம் வரை நோன்பு இருப்பார்கள். மாதம் முழுவதும் இந்த வகை நோன்பை இஸ்லாமியர்கள் அனைவரும் தவறாமல் கடைப்பிடிப்பார்கள்.

“கொரோனாவிலிருந்து விடுபடும் நன்னாளுக்கு ஈகை திருநாள் துணையாகட்டும்” – வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

அந்த வகையில் 30ஆவது நாளில் பிறை தெரிந்த மறுநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். இதனால் நாளை நோன்பு கடைப்பிடிக்கப்படும் என்றும், நாளை மறுநாள் ரமலான் கொண்டாடப்படும் எனவும் தமிழ்நாட்டின் காஜி அறிவித்துள்ளார். இச்சூழலில் இஸ்லாமியர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அந்த வாழ்த்து செய்தியில், “தியாகமும், ஈகையும் இணைந்த மார்க்க நெறியினைப் பின்பற்றி வாழும் இஸ்லாமியப் பெருமக்களுக்கு என் இனிய ரமலான் நல்வாழ்த்துகள். தமிழக மக்களுக்கே உரிய பெருமைக்குரிய பண்பாடான அனைத்து மத சகோதரத்துவம் என்றென்றும் நீடித்து நிலைத்திருக்கும் வகையில் இந்தப் பெருநாள் அமையட்டும்.

“கொரோனாவிலிருந்து விடுபடும் நன்னாளுக்கு ஈகை திருநாள் துணையாகட்டும்” – வாழ்த்து கூறிய முதல்வர் ஸ்டாலின்!

அரசு வெளியிட்டுள்ள பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து பெருநாளை கொண்டாட அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். சிறுபான்மை சமுதாய மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் என்றும் தொப்புள் கொடி உறவு உள்ளது. முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களும், நானும் என்றும் இஸ்லாமிய சமுதாய மக்களின் மேல் பேரன்பு கொண்டவர்கள். தி.மு.கழக அரசு இஸ்லாமிய பெருமக்களுக்கு எந்நாளும் பாதுகாப்பு அரணாக விளங்கும் என்பதை இந்த இனிய நன்னாளில் மீண்டும் உறுதிப்படுத்த விழைகிறேன். பேரிடரிலிருந்து அனைவரும் மீள்கின்ற நன்னாளுக்கு இந்தப் பெருநாள் துணையாகட்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.