ஸ்டாலினுக்கு சாரதியான சபரீசன்

 

ஸ்டாலினுக்கு சாரதியான சபரீசன்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக சார்பில் விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் என்ற பெயரில் ஏற்கனவே திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி, இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உட்பட 20க்கும் மேற்பட்ட கழக நிர்வாகிகள் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” என்ற புதிய பிரச்சார பயணத்தை,திமுக தலைவர் ஸ்டாலின், நாளை திருவண்ணாமலையில் தொடங்குகிறார். தேர்தல் பிரச்சார பயணத்திற்கு புறப்பட்ட திமுக தலைவர் ஸ்டாலின் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு நேராக சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடம் மற்றும் கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது அங்கிருந்த பொதுமக்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

ஸ்டாலினுக்கு சாரதியான சபரீசன்

பின்னர் கோபாலபுரத்தில் உள்ள அவரது தாயார் தயாளு அம்மாவிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொண்டு புறப்படும் போது
ஸ்டாலினுக்கு திருஷ்டி பூசணிக்காய் மற்றும் தேங்காய் உடைக்கப்பட்டது. வழக்கமாக திமுக தலைவர் ஸ்டாலின் பயணிக்கும் காரை விட்டுவிட்டு, அவரது மருமகன் சபரீசன் வாங்கியுள்ள புதிய காரில் பயணம் மேற்கொண்டார்.

ஸ்டாலின் மருமகன் சபரீசன் கார் ஓட்டும் சாரதியாகவும், அவருக்கு அருகில் முன் இருக்கையில் ஸ்டாலின் அமர்ந்து திருவண்ணாமலை நோக்கி பயணித்தனர்.