மறைக்கப்பட்ட 236 மரணங்கள் என்ன ஆனது? மாவட்ட வாரியான பரிசோதனையை வெளியிடுங்கள்- மு.க.ஸ்டாலின்

இதுகுறித்து முகநூலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் முகநூல் பதிவு”மு.க.ஸ்டாலின் அரசியல் அறிக்கைகளை மட்டுமே வெளியிடுகிறார் என்றும், இந்த அரசுக்கு ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக என்ன சொல்லியிருக்கிறார் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுள்ளார். அவருக்கு இதற்கு மேல் என்ன ஆலோசனைகள் சொல்வது என்று எனக்கே தெரியவில்லை. அந்தளவுக்கு ஆலோசனைகளை மார்ச் மாதம் 16-ம் தேதியில் இருந்து சொல்லி வருகிறேன். இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். இவை அனைத்தும் மக்கள் மன்றத்தில் உள்ளது. அதனை மீண்டும் முழுமையாகப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளும் திறன் இருக்குமானால், புரிந்து செயல்படுத்துங்கள் என்று முதலமைச்சரைக் கேட்டுக் கொள்கிறேன்.

இதுவரை நான் விடுத்த ஒரு சில ஆலோசனைகளைத் தவிர, பெரும்பாலான மற்றவற்றைக் கேட்காத நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, ‘ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?’ என்று பிரச்சினையைத் திசை திருப்பி வருகிறார் பழனிசாமி. நான் சொன்ன ஆலோசனைகள் மக்களுக்குத் தெரியும். முதல்வருக்கு இதுவரை தெரியவில்லை என்றால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள். பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள். தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுங்கள். தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள். வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள். மக்களைக் காக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் அரசு காக்க வேண்டும். பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிடுங்கள். மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளியுங்கள். பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுங்கள். சித்த மருத்துவ மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேளுங்கள். கேரளா எப்படி மீள்கிறது; தாராவி எப்படிக் காக்கப்படுகிறது என்பதை தெரிந்தறியுங்கள்.- இவை அனைத்தும் நான் ஏற்கனவே சொன்னவை. மீண்டும் சொல்கிறேன்; மீண்டும் மீண்டும் சொல்வேன்; சொல்லிக் கொண்டே இருப்பேன்; மக்கள் காக்கப்படும்வரை!” என குறிப்பிட்டுள்ளார்.

Most Popular

“நாய் மாமாவாக மாறிய தாய் மாமாவால் வந்த விளைவு” -அனாதையாக ரோட்டில் அலையும் எட்டு மாத கர்ப்பிணி பெண் கதையை கேளுங்க .

பீகார் மாநிலம் கதிஹார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு 20 வயது இளம் பெண்ணை அவரின் பெற்றோர்கள் அனாதையாக விட்டு இறந்து விட்டார்கள் .அதற்கு பிறகு அந்த பெண் தன்னுடைய தாய் மாமா வீட்டில்...

அரசு அலுவகத்தில் தலைகீழாக ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாட்டின் 74வது சுதந்திர தினத்தன்று இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இருப்பினும் கொரோனா காலம் என்பதால் வழக்கமான கலை, நிகழ்ச்சிகள் இன்றி எளிமையாக விழா நடத்தப்பட்டது. அதன்படி தமிழக முதல்வர் பழனிசாமி கோட்டை கொத்தளத்தில்...

5 நாள் கடந்தும் கண் விழிக்காத பிரணாப்! – தீவிரமாக கண்காணித்து வருதாக மருத்துவமனை தகவல்

மூளையில் அறுவைசிகிச்சை முடிந்து ஐந்து நாட்கள் ஆன நிலையில் முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்று டெல்லி ராணுவ மருத்துவமனை தெரிவித்துள்ளது. மூளையில் ரத்தம் உறைந்ததால் ஏற்பட்ட...

கொரோனா சிகிச்சை வார்டில் கணினி ஆசிரியர்கள் பணியாற்ற உத்தரவு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகின்றனர். பரிசோதனைகளை அதிகரிப்பது, நடமாடும் மருத்துவமனை, கொரோனா மருந்துகள் என பல்வேறு...
Do NOT follow this link or you will be banned from the site!