அப்பாவுவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்த மு.க.ஸ்டாலின்,ஈபிஎஸ்!

 

அப்பாவுவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்த மு.க.ஸ்டாலின்,ஈபிஎஸ்!

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் கடந்த 7ம் தேதி பதவியேற்றுக் கொண்ட அதே நாளில் அமைச்சர்களும் பதவியேற்றுக்கொண்டனர். எம்எல்ஏக்கள் அன்று பதவி ஏற்காததால், தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம் செய்யப்பட்டு நேற்று சட்டப்பேரவை கூட்டம் கூடியது. அதில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் அனைவருக்கும் பிச்சாண்டி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அப்பாவுவை சபாநாயகர் இருக்கையில் அமரவைத்த மு.க.ஸ்டாலின்,ஈபிஎஸ்!

இதனிடையே, சட்டபேரவை சபாநாயகராக ராதாபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ அப்பாவு தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற செயலாளரிடம் நேற்று அவர் மனு தாக்கல் செய்த நிலையில், சட்டப்பேரவையில் போட்டியின்றி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். அதே போல, துணை சபாநாயகராக பிச்சாண்டியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

அதன் படி இன்று, தமிழக சட்டப்பேரவை சபாநாயகராக அப்பாவு பதவி ஏற்றுக்கொண்டார். அவரை முதல்வர் மு.க.ஸ்டாலினும் எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து சபாநாயகர் இருக்கையில் அமர வைத்தனர். 1996ம் ஆண்டு முதல் ராதாபுரம் தொகுதியில் தொடர் வெற்றியை கண்ட அப்பாவு, 2016ம் ஆண்டு தேர்தலில் தோல்வியை தழுவினார். 2021ம் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் மிகுந்த அனுபவம் பெற்றதால் அப்பாவு சபாநாயகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.