அப்பா மகன் சென்டிமென்ட்.. உதயநிதிக்காக களமிறங்கிய ஸ்டாலின்

 

அப்பா மகன் சென்டிமென்ட்.. உதயநிதிக்காக களமிறங்கிய ஸ்டாலின்

தமிழகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் அந்த நாள் வரப்போகிறது. ஆட்சி மாற்றம் நடக்குமா? அல்லது இந்த ஆட்சியே நீடிக்குமா? என்பது மே 2ம் தேதி தெரிந்துவிடும். தேர்தலுக்கான பிரச்சாரங்கள் இன்று மாலை 7 மணியோடு ஓய்வடைகிறது. அதனால், அரசியல் கட்சிகள் அனைத்தும் விறுவிறுப்பாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அப்பா மகன் சென்டிமென்ட்.. உதயநிதிக்காக களமிறங்கிய ஸ்டாலின்

முதல்வர் வேட்பாளர்களான ஓபிஎஸ் எடப்பாடியிலும் ஸ்டாலின் கொளத்தூரிலும் கமல்ஹாசன் கோவை தெற்கிலும் சீமான் திருவொற்றியூரிலும் டிடிவி தினகரன் கோவில்பட்டியிலும் பிரச்சாரத்தை நிறைவு செய்கிறார்கள். இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணியில் போட்டியிடும் தனது மகன் உதயநிதி ஸ்டாலினை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்பா மகன் சென்டிமென்ட்.. உதயநிதிக்காக களமிறங்கிய ஸ்டாலின்

பிரச்சாரத்தில் பேசிய அவர், தோல்வி பயத்தால் அதிமுக தலைவர்கள் உரை உளறி வருகிறார்கள். திமுக வெற்றியை தடுக்க அதிமுக விளம்பரம் செய்து வருகிறது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த அதிமுகவினர் செய்த குற்றங்கள் குறித்து எந்த விளம்பரமும் இல்லை. விளம்பரங்களால் திசை திருப்ப முடியாது. வரும் 6ம் தேதி மக்கள் பதிலடி தருவார்கள் என்று அதிரடியாக பேசினார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின், ஐ.டி.ரெய்டால் இன்னும் 25 சீட்டு அதிகமாகத்தான் கிடைக்கும். மகள் வீட்டில் ரெய்டு நடத்தி அவர்கள் அப்படித் தான் சொன்னார்கள். அதிமுகவின் கனவு பலிக்காது என்றும் கூறினார். இதனிடையில், உதயநிதிக்காக நான் பரப்புரை செய்யும் போது கருணாநிதி எனக்காக வாக்கு சேகரித்த நினைவுகள் வருகிறது என்றும் சென்டிமென்ட்டாக பேசினார்.