உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 2ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம் இதோ!

 

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 2ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம் இதோ!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை மறுநாள் முதல் 2ஆம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கவிருக்கிறார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 2ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம் இதோ!

2021 சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் திமுக – அதிமுக கட்சிகள் தொடர்ந்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் மு.க. ஸ்டாலின், கடந்த 29 ஆம் தேதி திருவண்ணாமலை, செங்கம், கலசபாக்கம், கீழ்பெண்ணாத்தூர் ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அத்துடன் அங்குள்ள மக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்றுக்கொண்ட ஸ்டாலின் திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாளில் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 2ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம் இதோ!

இந்நிலையில் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை உங்கள் தொகுதியில் ஸ்டாலின் இரண்டாம் கட்ட சுற்றுப் பயணம் தொடங்கவுள்ளது. 4ஆம் தேதி பரமக்குடியில் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின், 8 ஆம் தேதி திருப்பத்தூரில் நிறைவு செய்கிறார். கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், நாகர் கோவில், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட பகுதிகளில் பரப்புரை மேற்கொள்ளவிருக்கிறார்.

உங்கள் தொகுதியில் ஸ்டாலின் 2ஆம் கட்ட சுற்றுப்பயண விவரம் இதோ!