‘பெரியார் மண்ணில்’.. மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடாது – ஸ்டாலின்

 

‘பெரியார் மண்ணில்’.. மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடாது – ஸ்டாலின்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டே இருக்கிறது. இன்னும் ஒரு சில வாரங்களில் தமிழகமே எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கும் அந்த நாள் வரப் போகிறது. கடந்த 2 முறையாக தோல்வியை தழுவிய திமுக, இந்த முறை எப்படியாவது தேர்தலில் வென்று விட வேண்டுமென கூட்டணி கட்சிகளுடன் இணைந்து பல்வேறு வியூகங்களை வகுத்து தீவிர களப்பணியாற்றிக் கொண்டிருக்கிறது.

‘பெரியார் மண்ணில்’.. மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடாது – ஸ்டாலின்

திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கை அனைத்து கட்சியினரையும் திரும்பி பார்க்க வைத்தது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பயனளிக்கும் வகையில் அந்த தேர்தல் அறிக்கை அமைந்திருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தஞ்சை, திருவையாறு, பட்டுக்கோட்டை, பாபநாசம் உள்ளிட்ட 8 தொகுதிகளின் வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

‘பெரியார் மண்ணில்’.. மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடாது – ஸ்டாலின்

பிரச்சாரத்தில் பேசிய ஸ்டாலின், காவிரி கரையில் உயிர் பிரியும் வரை காவிரி உரிமைக்காக போராடிய தலைவர் கருணாநிதி. காவிரி உரிமையை மீட்டெடுத்து அதனை காப்பாற்றி வருவது திமுக தான். அண்ணா, பெரியார் மண்ணில் மோடி மஸ்தான் வேலை எல்லாம் எடுபடாது. திமுக தேர்தல் அறிக்கையில் கூறியதை செய்வோம். திமுக எப்போதும் சொல்வதை செய்யும், செய்வதை சொல்லும் என்று கூறினார். மேலும், திமுக ஆட்சி வந்ததும் கும்பகோணம் தனி மாவட்டமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.