இது பரப்புரை கூட்டமா? தேர்தல் வெற்றி விழா கூட்டமா? : நெகிழ்ந்து போன ஸ்டாலின்

இது பரப்புரை கூட்டமா? தேர்தல் வெற்றி விழா கூட்டமா? : நெகிழ்ந்து போன ஸ்டாலின்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது ஸ்டாலின், ‘உங்களை தேடி வந்திருக்கிறேன்’ என பேசத் தொடங்கியதும் மக்கள் கூட்டம் மகிழ்ச்சியில் கோஷங்களை எழுப்பியது. அதைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த ஸ்டாலின், இது தேர்தல் பிரச்சார கூட்டமா? அல்லது தேர்தல் வெற்றி விழா கூட்டமா? என்கிற அளவுக்கு மக்கள் கூட்டம் இருக்கிறது. உங்கள் ஆர்வத்தையும் எழுச்சியையும் பார்க்கின்ற போது, இப்படியே பேசாமல் உங்களையே பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பது போல தோன்றுகிறது என்று உணர்ச்சி பொங்க பேசினார்.

இது பரப்புரை கூட்டமா? தேர்தல் வெற்றி விழா கூட்டமா? : நெகிழ்ந்து போன ஸ்டாலின்

இதையடுத்து, தேர்தலுக்காக மட்டும் வந்திருக்கிறேன் என்று நினைக்க வேண்டாம். எப்போதும் எந்த நேரத்திலும் எப்படிப்பட்ட நிலையிலும் உங்களது சுக, துக்க நிகழ்ச்சிகளில் உரிமையோடு பங்கேற்பவன் தான் நான். உங்களை நாடி இங்கு வந்திருக்கிறேன். திமுகவுக்கும் கூட்டணி கட்சிகளுக்கும் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடி தர வேண்டுமென்று மக்கள் மத்தியில் கேட்டுக் கொண்டார்.

இது பரப்புரை கூட்டமா? தேர்தல் வெற்றி விழா கூட்டமா? : நெகிழ்ந்து போன ஸ்டாலின்

மேலும், தன் மானத்தைக் காப்பாற்ற ஆட்சி மாற வேண்டும். ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் அல்ல தன்மானம் சுயமரியாதை காப்பாற்றுவதற்கான தேர்தல். பாஜகவிடம் நாட்டை அடமானம் வைத்த அதிமுகவை விலக்குவதற்கான தேர்தல் இது என்று அதிரடியாக பேசினார்.