மா.செக்கள், வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

 

மா.செக்கள், வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக, அதிமுக, அமமுக, நாம் தமிழர் மற்றும் மநீம என 5 முனை போட்டி நிலவினாலும் திமுக – அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது. அதிமுக ஆட்சியை தக்க வைக்குமா? அல்லது திமுக ஆட்சியை பிடிக்குமா? என்பது இன்னும் ஒரு நாளில் தெரிய வந்துவிடும்.

மா.செக்கள், வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்தும் திமுகவுக்கு சாதகமாக இருந்தது. பிந்தைய கருத்துக் கணிப்புகளும் திமுகவுக்கு தான் சாதகமாக இருக்கிறது. இதனால், முதல்முறையாக முதல் வேட்பாளராக களமிறங்கியிருக்கும் ஸ்டாலினின் வெற்றியைக் கொண்டாட திமுகவினர் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய பரபரப்பான சூழலில் தான், மாவட்ட செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்தார்.

மா.செக்கள், வேட்பாளர்களுடன் மு.க.ஸ்டாலின் தீவிர ஆலோசனை!

அதன் படி, தற்போது காணொளி வாயிலாக திமுக வேட்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். வாக்கு எண்ணிக்கை தினத்தன்று செய்ய வேண்டியவை குறித்து வேட்பாளர்களிடம் ஸ்டாலின் கூறி வருவதாக தகவல்கள் வெளியாகின்றன. இதற்கு முன்னதாக, கொரோனாவை கருத்தில் கொண்டு திமுகவின் வெற்றியை வீட்டிலிருந்த படியே கொண்டாடுங்கள் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது நினைவுகூரத்தக்கது.