அரசு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

 

அரசு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகின. 159 இடங்களை கைப்பற்றி திமுக ஆட்சி அமைக்க உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு பன்மடங்கு அதிகரித்து வரும் இந்த இக்கட்டான சூழலில், தமிழகத்தின் அடுத்த முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்க உள்ளார்.

அரசு அதிகாரிகளுடன் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!

தேர்தலில் தோல்வியடைந்ததால் எடப்பாடி பழனிசாமி தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததையடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட அனைத்து பணிகளையும் அதிரடியாக கையிலெடுத்தார் மு.க ஸ்டாலின். நேற்று தலைமைச் செயலாளர் மற்றும் சுகாதாரத்துறை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். அக்கூட்டத்துக்கு பிறகு, தமிழகத்தில் கட்டுப்பாடுடன் கூடிய ஊரடங்கு 20ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியானது.

இந்த நிலையில், முதல்வராக பதவியேற்க உள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று மீண்டும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சனுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மு.க.ஸ்டாலினின் இல்லத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.